வெடிவைத்து காட்டுப் பன்றிகளை கொன்ற 3 பேர் கைது...

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே வெடிவைத்து காட்டுப் பன்றிகளை கொன்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

வெடிவைத்து காட்டுப் பன்றிகளை கொன்ற 3 பேர் கைது...

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி வனச்சரகத்திற்குட்பட்ட தெற்குமலை  பீட் பகுதியில் நாட்டு வெடி வைத்து மிளா மற்றும் காட்டு பன்றி ஆகிய வன விலங்குகளை வேட்டையாடுவதாக கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் வனச்சரக அலுவலர்கள் மற்றும் வனஊழியர்கள் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது தோவாளை அருகில் உள்ள தனியார் கல்லூரி பின்புறம் வெடிவைத்து காட்டுப் பன்றிகளை வேட்டையாடிய கும்பல்  இருப்பது தெரியவந்ததை அடுத்து அங்கு சென்ற வனத்துறையினரை கண்ட கும்பல் தப்பி ஓடியது.

அப்போது அவர்களை வனத்துறையினர் துரத்திப் பிடித்த நிலையில் ஒருவன் கால்வாயில் குதித்து தப்பி ஓடினான், கூட்டாளி மூன்று பேர் பிடிப்பட்டுள்ளனர். அவர்களில் தோப்பூர் பகுதியை சேர்ந்த மாணிக்கம் (33) ஏசுவடியான் (48) காட்டு புதூரை சேர்ந்த ஸ்டீபன்ராஜ் (28)  என்பது தெரியவந்தது.

பிடிபட்ட 3 பேரிடம் இருந்து இரண்டு இருசக்கர வாகனங்கள் வேட்டைக்குப் பயன்படுத்தப்பட்ட நாய் கத்தி அரிவாள் மற்றும் காட்டுப் பன்றி இறைச்சி போன்றவை கைப்பற்றப்பட்டன.