கிணறு தோண்டுவதற்காக வெடி வெடித்தில் 3 பேர் பலி...

ஆலங்குளம் அருகே கிணறு வெட்டும் பணியின்போது, வெடி வெடித்ததில் 3 தொழிலாளர்கள் உயிழந்தனர்.

கிணறு தோண்டுவதற்காக வெடி வெடித்தில் 3 பேர் பலி...

தென்காசி | ஆலங்குளம் அருகில் உள்ள புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பால் என்பவர் தனக்கு சொந்தமான நிலத்தில் கிணறு வெட்டும் பணியை கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கினார்.

கிணறு வெட்டும் ஒப்பந்த பணியை ஆலங்குளம் அருகே உள்ள காளத்திடம் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் தனது ஊழியர்களுடன் மேற்கொண்டு வந்தார். கடந்த 10 தினங்களாக மண் பகுதியை தொழிலாளர்கள் தோண்டி எடுத்துள்ளனர்.

மேலும் படிக்க | 228 மணி நேரத்திற்கு பிறகு மீட்கப்பட்ட சிறுவன்...

இன்று காலை பாறையை வெடிவைத்து தகர்ப்பதற்காக டெட்டனேட்டர் கொண்டு கிணற்றிற்கு மேல்பகுதியில் வைத்து சோதனை செய்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  டெட்ட நேட்டர் வெடித்ததில் பணியில் ஈடுபட்டிருந்த அரவிந்த் என்ற 21 வயது தொழிலாளி சம்பவ இடத்தில் உடல் சிதறி உயிரிழந்தார்.

படுகாயம் அடைந்த மேலும் நான்கு பேரை ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஆலங்குளத்தை சேர்ந்த ஆசிர் சாலமோன் (26) என்ற தொழிலாளியும், 108 ஆம்லன்ஸில் நெல்லை மருத்துவமனை செல்லும் வழியில் ராஜலிங்கம் (52) உயிரிழந்தார்.

மேலும் படிக்க | மேய்ந்து கொண்டிருந்த 400 வாத்துகள் உயிரிழப்பு...

இதனால் பலி எண்ணிக்கை 3 ஆனது. சம்பவ இடத்திற்கு வந்த ஆலங்குளம் போலீசார் ஒப்பந்ததாரர் சக்தி வேலை கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். போலீசார் நடத்திய முதல் கெட்ட விசாரணையில் தோண்டும்போது வெடி மருந்து சோதனை செய்வதற்காக சக்தி குறைந்த பேட்டரி பயன்படுத்துவது வழக்கம்.

ஆனால் இன்று காலை பணிக்கு வந்த 5 தொழிலாளர்களும் சக்தி வாய்ந்த பேட்டரி மூலம் சோதனை செய்ததால் சம்பவ இடத்திலே   வெடித்தது  தெரியவந்ததாக கூறப்படுகிறது.

சம்பவ குறித்து ஆலங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். வெடிவிபத்து நடந்த இடத்தில் ஏடிஎஸ்பி சார்லஸ் கலைமணி, தாசில்தார் ஒசன்னா பெர்னான்டோ ஆகியவர் விசாரனை நடத்தி வருகின்றனர்

மேலும் படிக்க | புலி தாக்கியதில் 2 மாடுகள் பலி...

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அடுத்த ராம்நகர் பகுதியில் கிணறு தோண்டும் பணியில்  முதற்கட்டமாக 15 அடி தோண்டி உள்ளனர். அடுத்ததாக பாறை வந்ததால் வெடி மருந்து குச்சிகளை பயன்படுத்தி வெடிக்க வைப்பதற்கான முயற்சியை செய்துள்ளனர்.

அதை தரையில் வைத்து வெடிக்க வைப்பதற்கான சோதனை செய்யும் போது எதிர்பாராதமாக வெடி மருந்து குச்சிகள் வெடித்ததில் கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த நான்கு பேரில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் படிக்க | இறந்த மகளின் கையைப் பிடித்து அருகிலேயே அமர்ந்திருந்த தந்தை... மனதை வருடும் வைரல் போட்டோ...

நான்காவதாக மாரி செல்வம் என்பவர் மட்டும் காயத்துடன் ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில் உயிரிழந்த காயம் பட்டவர்களின் பெயர் விபரங்கள் கீழே உள்ளது.

  1. அரவிந்த் - ஆனையப்பபுரம்.
  2. ஆசீர் சாலமோன் ஆலங்குளம்
  3. ராஜலிங்கம் ஆலங்குளம்

விபத்தில் மூன்று பேரும் உயிரிழப்பு. ராஜலிங்கத்தின் மகன் மாரிசெல்வம்  ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

--- பூஜா ராமகிருஷ்ணன்

மேலும் படிக்க | புதிதாக திருமணமான இளம் ஜோடி, கைக்கோர்த்து சடலமாக மீட்பு...