இரிடியம்; கோயில் கலசத்தை திருட முயன்ற 5 பேர் கைது!

இரிடியம்; கோயில் கலசத்தை திருட முயன்ற 5 பேர் கைது!

800 ஆண்டுகள் பழமை வாய்ந்த பல்லவர் கால கோவிலில் இருடியத்திற்றாக கலசங்களை திருட முயன்ற 5 பேரை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருமணம் கிராமத்தில் அமைந்துள்ள 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் திருக்கோவிலில் நேற்று இரவு  ராஜகோபுரத்தின் உச்சியில் சிலர் ஏணியை ஏறியுள்ளனர். இனை பார்த்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள்  கூச்சலிடவே கோபுரத்தின் மேல் இருந்து குதித்து தப்பி ஓடிள்ளனர். அப்பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து அவர்களை துரத்தி பிடித்து வெள்ளவேடு காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

காவல் துறையினர்  ஐந்து பேரையும் கைது செய்து அவர்கள் எடுத்து வந்த இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் தண்டையார்பேட்டையைச் சேர்ந்த மதிவாணன். லோகநாதன். கோபால். சற்குணம், லோகேந்திரன் என்பது தெரிய வந்தது. மேலும் அவர்கள் கோயில் கலசத்தை திருட வந்ததும் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து வழக்கு பதிவு செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போலீசார், சென்னை புழல் சிறையில் அவர்களை அடைத்தனர்.

800 ஆண்டுகள் பழமையான பல்லவராயர் கால பெருமாள் கோவில் என்பதால் இருடியம் செம்பு கலந்த கலசங்கள் இருப்பது அறிந்து கொள்ளையடிக்க வந்த சம்பவம் வெள்ளவேடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிக்க: அலுவலகத்திற்கு தாமதம்: தட்டிகேட்ட உயரதிகாரி; அடியாளை வைத்து தாக்கிய பெண் ஊழியர்!