துருப்பிடித்த ஸ்பூனை வைத்து சுரங்கம் தோண்டி....6 கைதிகள் தப்பியோட்டம்!!

இஸ்ரேலிய சிறையில் இருந்து துருப்பிடித்த ஸ்பூனை வைத்து ஆறு பாலத்தீனர்கள் சுரங்கம் ஒன்றை தோண்டி தப்பித்த சம்பவம் அறங்கேறியுள்ளது.

துருப்பிடித்த ஸ்பூனை வைத்து சுரங்கம் தோண்டி....6 கைதிகள் தப்பியோட்டம்!!

இஸ்ரேலில் உள்ள சிறைச்சாலை ஒன்றில் இருந்து சுரங்கம் தோண்டப்பட்டு இரவஓடு இரவாக ஆறு கைதிகள் தப்பியொடியுள்ளனர். அவர்களை தேடும் பணியில் இஸ்ரேலிய காவல் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அவரகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த கில்போ எனப்படும் சிறைச்சாலையின் அறையில் இருந்து சுற்றுச் சுவருக்கு வெளியே உள்ள சாலை வரையிலான நிலத்துக்கு அடியில் சுரங்கம் ஒன்றை தோண்டிய சிறைக் கைதிகள் அதன் வழியாக தப்பி சென்றுள்ளனர்.

அப்பகுதியில் உள்ள வயல்கள் வழியாக தப்பியோடிய கைதிகளை கண்ட விவசாயிகள் காவல் துறையிடம் தகவல்கள் தெரிவித்துள்ளனர்.அதிகாரிகள் அவர்கள் தெரிவித்த தகவலின் பெயரில் கைதிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர்.

தப்பி சென்ற கைதிகளில் ஐவர் மட்டும் இஸ்லாமிக் ஜிகாத் எனும் அமைப்பின் உறுப்பினர்கள் எனவும் ஒருவர் மட்டும் அல் அக்கா தியாகிகளின் படையின் தீவிரவாத குழுவின் முன்னாள் தலைவர் எனவும் கருதி வருகின்றனர்.இவர்கள் ஆறு பேரும் தப்பிச்சென்றது இஸ்ரேலின் மிகப்பெரிய பாதுகாப்பு படை மற்றும் உளவுத் துறையின் தோல்வி எனவும் சொல்லப்படுகிறது.இதனை தொடர்ந்து அவர்கள் தப்பிச் சென்றது பாலத்தீன தீவிரவாத குழுக்களுக்கு மகிழ்ச்சியடைய செய்தும் அவர்களை புகழ்ந்தும் வருகின்றனர்.

மேலும் அவர்கள் தப்பித்தது குறித்து கூறுகையில் இந்த கில்போ சிறைச்சாலையானது அதி உயர் பாதுகாப்புகளை கொண்டு அமைக்கப்பட்டதாகவும்,இப்படிப்பட்ட பாதுகாப்புகளை அதிகம் கொண்டுள்ளதால் இதனை ஆங்கிலத்தில் 'தி சேஃப்' (The Safe) எனவும் அழைக்கப்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.

வயல் வழியாக கைதிகள் தப்பித்து ஓடுகிறார்கள் என்பதையே விவசாயிகள் கூறிய பின்னரே அதிகாரிகள் சென்று அவர்கள் இருந்த அறையை சென்று பார்வையிட்டதாக கூறப்படுகிறது.இதன்பின் உள்ளூர் நேரப்படி சிறைக்கைதிகளை எண்ணிய போது ஆறு பேர் குறைந்தது தொடர்ந்து இவர்கள் தப்பித்து இருப்பதை உறுதி செய்து கொண்டனர்.

மேலும் இவர்களின் அறையில் ஒரு போஸ்டருக்கு பின்னால் ஒரு துருபிடித்த நிலையில் ஸ்பூன் ஒன்று இருந்ததாகவும் அதனை பயன்படுத்தி சுரங்கத்தை தோண்டி இருப்பதும் அந்நாட்டு ஊடகம் தெரிவித்ததுள்ளதாக சொல்லப்படுகிறது.

இவர்களின் சிறை அறையில் உள்ள கழிபிடத்தில் தோண்டப்பட்ட குழியானது சிறையின் தளத்துக்கு கீழே இருந்த ஒரு இடத்தை சென்று அடைந்ததாக சொல்லப்படுகிறது.மேலும் இந்த சிறைச்சாலையின் கட்டுமானத்தின் போது தரைக்கு அடியில் வெற்றிடம் வைத்து கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது.

சிறையின் கட்டுமானத்தின் போது விடப்பட்ட சிறிய கோளாறுகள் மூலம் இன்று இந்த கைதிகளான மூளைக்காரர்கள் தப்பிச் சென்றதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.தரைக்கு அடியில் தோண்டப்பட்ட குழி காலி இடத்தை சென்றடைந்ததும் அவர்கள் இதனை பயன்படுத்தி தப்பியுள்ளதாக கூறினர்.