3 சிறுமிகளை மண்ணெண்ணை ஊற்றி எரிக்க முயன்ற வளர்ப்பு தந்தை...10 வயது சிறுமி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

நெல்லையில் பேக்கரி கடை ஒன்றில் காசு கொடுக்காமல் திண்பண்டம் வாங்கிய 3 சிறுமிகள் மீது வளர்ப்பு தந்தை மண்ணெண்னை ஊற்றி தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

3 சிறுமிகளை மண்ணெண்ணை ஊற்றி எரிக்க முயன்ற வளர்ப்பு தந்தை...10 வயது சிறுமி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

கன்னியகுமாரி மாவட்டம் நாகர்கோவில் பீச் ரோட்டை சேர்ந்தவர் சுஜா, இவருக்கும் குருநாதன் என்பவருக்கும் திருமணமாகி 3 குழந்தைகள் பிறந்துள்ளது. இந்நிலையில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு குருநாதன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

அதனைதொடர்ந்து சுஜா கன்னியாகுமரி மாவட்டம் கடியபட்டினத்தை சேர்ந்த ஜேசு அந்தோணி ராஜ் என்பவரை, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். அவர்கள் இருவரும் குழந்தைகளுடன் நெல்லை மாவட்டம் காவல்கிணறு பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.

தனது இரண்டாவது கணவர் வேலை பார்க்கும் தனியார் உணவகத்தில் சுஜா பணியாற்றி வந்துள்ளார். இதற்கிடையில் நேற்று முன் தினம் குழந்தைகளான மாதேஷ், மகேஸ்வரி ஆகியோர் திண்பண்டம் வாங்க காவல்கிணற்றில் உள்ள இனிப்பகம் சென்றுள்ளனர். அவர்கள் இருவரும் அடிக்கடி அந்த கடையில் திண்பண்டம் வாங்குவது வழக்கம்.

அதேபோல் இரண்டு சிறுமிகளும் திண்பண்டம் வாங்கி சாப்பிட்டுவிட்டு வீடு வந்துள்ளனர். கடையில் வாங்கிய திண்பண்டத்திற்கு காசு கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து கடையில் ஊழியர் அந்தோணிராஜிடம் கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்தோணி ராஜ் வீட்டிற்கு வந்து குழந்தைகளை அடித்துள்ளார். ஒரு கட்டத்தில் மேலும் ஆத்திரமடைந்த அவர், அருகில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து மூன்று குழந்தைகள் மீது ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் மாதேஷ், மகராசி என்ற இரண்டு சிறுமிகளும் தப்பி சென்று வெளியில் ஓடி யுள்ளனர். 10 வயது சிறுமி மகேஷ்வரி தீயில் சிக்கி கொண்டார். அப்போது அச்சிறுமி தன்னை காப்பாற்ற வேண்டிய தீயிட்டு கொளுத்திய கொடூர தந்தையிடன் மன்றாடி உள்ளார்.

அதற்கு தீ சிறுமியின் உடல முழுவதும் பரவியது. சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் சிறுமியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஆபத்தான நிலையில் சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக அந்தோணிராஜை கைது செய்த பணகுடி போலீசார், அவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 4 பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.