காதலிப்பது போல ஏமாற்றி பணம் சுருட்டிய வாலிபர்!

காதலிப்பது போல ஏமாற்றி பணம் சுருட்டிய வாலிபர்!

பணத்திற்காக பெண்ணை காதலிப்பது போல் ஏமாற்றிய நபர் மீது பாதிக்கப்பட்ட பெண் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டை ஜெயராம் தெரு பகுதியை சேர்ந்தவர் ராஷ்மிகா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவர் குடும்பத்துடன் சைதாப்பேட்டையில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த சதாம் உசேன் என்பவருடன் நட்பாக பழகி உள்ளார். நாளடைவில் இந்த நட்பு காதலாக மாறி சதாம் உசேனுக்கு ராஷ்மிகா சிறுக சிறுக பண உதவி செய்துள்ளார். பணம் அதிகமாக இருப்பதை தெரிந்து கொண்ட சதாம் உசேன் தனது தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு விட்டதாகவும் அதனை உடனடியாக கட்டவில்லை என்றால் தன் மீது புகார் கொடுத்து விடுவார்கள் என ராஷ்மிகாவிடம் உருக்கமாக பேசி பணத்தை பெற்றுள்ளார்.

மேலும் வங்கியில் லோன் பெற்று தருமாறும் பணத்தை  பெற்றுள்ளார். இதுவரை 8 லட்சம் ரூபாய் வரை ராஷ்மிகாவிடமிருந்து பெற்றுக் கொண்ட சதாம் உசேன் ஒரு கட்டத்தில் ராஷ்மிகா இஎம்ஐ கட்ட வேண்டும் என கூறியதற்கு என்னால் எதுவும் கட்ட முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி 8 லட்சம் ரூபாய் வரை அபகரித்து விட்டு தற்போது திருமணம் வேண்டாம் எனவும் சதாம் உசேன் தெரிவித்துள்ளார். இதற்கு ராஷ்மிகா தற்கொலை செய்துகொள்வேன் என மிரட்டியதற்கு தன் பெயரை எழுதி வைத்துவிட்டு செத்துப் போ எனவும் ராஷ்மிகாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்படி நீ செத்துப் போனால் நான் எப்படி வெளியே வரவேண்டும் எனவும் தனக்கு தெரியும் எனவும், தன்னுடைய உடன்பிறந்த சகோதரர் வழக்கறிஞர் என்பதால் அவர் மூலமாக நிச்சயம் வெளியே வந்து விடுவேன் எனவும் மிரட்டி உள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக குரோம்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ராஷ்மிகா புகார் கொடுத்ததற்கு அந்த புகாரை வாங்கி கூட பார்க்கவில்லை என ராஷ்மிகா கதறி உள்ளார். இதனை அடுத்து சென்னை காவல் ஆணைய அலுவலகத்தில் சதாம் உசேன் மீது புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறை சதாம் உசேனை கைது செய்வார்களா? தகுந்த நடவடிக்கை எடுப்பார்களா என ராஷ்மிகா கேட்டுக்கொண்டுள்ளார். குறிப்பாக காவல்துறையிடம் பணம் வேண்டாம் எனவும் தன்னை போல் மற்ற பெண்களை இந்த சதாம் உசேன் ஏமாற்றி வருவதாக தெரிவித்த ராஷ்மிகா அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுத்தால் போதும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க:"எத்தனை வழக்குகள் வந்தாலும் சந்திக்க தயாராக உள்ளேன்" உதயநிதி ஸ்டாலின் பேட்டி!