டிஜிபி அலுவலகத்தில் கணவன் மீது மனைவி புகார்.. வேலை வாங்கி தருவதாக கூறி பல பெண்களை ஏமாற்றி பணம் பறிப்பு!!

சென்னை டிஜிபி அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி பணம் பறித்ததாக  கணவன் மீது மனைவி புகார் மனு அளித்துள்ளார்.

டிஜிபி அலுவலகத்தில் கணவன் மீது மனைவி புகார்.. வேலை வாங்கி தருவதாக கூறி பல பெண்களை ஏமாற்றி பணம் பறிப்பு!!

விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டையை சேர்ந்தவர் நந்தினி, இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கும் மோனேஷ் பாபு என்பவருக்கும் இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டு இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.  பின்னா் இருவரும் மதுரை திருமங்கலத்தில் தனியாக வசித்து வந்தனர்.

இந்நிலையில், கணவா் மோனேஷ் பாபு தன்னை ஏமாற்றி விட்டதாக சென்னை டிஜிபி அலுவலகத்தில்  நந்தினி புகார் மனு அளித்துள்ளார்.

பின்னா் செய்தியாளா்களை சந்தித்து பேசிய அவா், தன்னிடம் இருந்து  52 சவரன் நகை பணம் எல்லாவற்றையும் பறித்துக் கொண்டு ஏமாற்றி விட்டதாகவும், இவாிடம் நூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவி பெண்கள் சிக்கி இருப்பது மிகவும் வேதனையாக இருக்கிறது என்றும் குறிப்பிட்டார்.

எனவே  தமிழக டிஜிபி, மோனேஷ் பாபு மீது உடனடியாக நடைவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், அவரை  கைது செய்து விசாரணை மேற்கொண்டால் பல பெண்கள் இவர் மீது புகார் கொடுப்பார்கள் எனவும்   நந்தினி கூறிப்பிட்டார்.