பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது கார் மோதி விபத்து - பெண் பலி

பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது கார் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒரு பெண் பலியானார். காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது கார் மோதி விபத்து - பெண் பலி

திண்டுக்கல் | பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா வருகிற பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது. இந்நிலையில் பழனி க்கு தற்போதிருந்தே ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வரத் துவங்கியுள்ளனர்.

இந்நிலையில் மதுரை மற்றும் கரூரில் இருந்து பழனிக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள் கூட்டத்தினர் பழனி-திண்டுக்கல் சாலையில் சத்திரப்பட்டி அருகே உள்ள வீரலப்பட்டி பிரிவு பகுதியில் நடந்து சென்றபோது, அவர்கள் பின்னால் சென்ற கார் ஒன்று பக்தர்கள் மீது மோதியது.

இதில் மதுரையை சேர்ந்த செல்வி என்ற பெண் சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து குறித்து தகவலறிந்து வந்த போலீசார் விபத்தில் படுகாயமடைந்த 5பக்தர்களை மீட்டு பழனி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.

மேலும் பலியான செல்வியின் உடலை பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். விபத்து ஏற்படுத்திய கார்  ஓட்டுனர் தப்பிஓடிய நிலையில் சத்திரப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க | கார், இரு சக்கர வாகனம், அரசு பேருந்து அடுத்தடுத்து மோதி விபத்து...மதுரையில் பரபரப்பு!