திருமணமான 4 மாதத்தில் இளம்பெண் தற்கொலை...!

திருமணமான 4 மாதத்தில் இளம்பெண் தற்கொலை...!

மணப்பாறை அருகே திருமணமான நான்கு மாதத்தில் இளம்பெண்  மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திருச்சி மாவட்டம் களத்துப்பட்டியைச் சேர்ந்த சரத்குமார் என்பவருக்கும், வடக்கிப்பட்டியைச் சேர்ந்த கவிபிரியா என்ற பெண்ணிற்கும் கடந்த ஜனவரி மாதம் 27 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. 

இதையும் படிக்க : அதிமுக ஆட்சியில் தொடங்கிய பணி...திமுக ஆட்சியில் திறக்கப்பட்டதால் பரபரப்பு...!

இந்நிலையில், கணவன் வீட்டிலிருந்த கவிப்பிரியா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையறிந்த பெண்ணின் குடும்பத்தார் மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறியதையடுத்து, பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். 

திருமணம் முடிந்து நான்கு மாதங்களே ஆகியுள்ளதால் ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்திய பின்னரே உண்மை நிலை தெரியவரும்.