அதிமுக மாஜி அமைச்சர் வருமானத்துக்கு அதிகமாக 73% வரை சொத்து சேர்ப்பு… லஞ்ச ஒழிப்புத்துறை தகவல்  

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, வருமானத்துக்கு அதிகமாக 73 சதவீதம் அளவுக்கு சொத்து சேர்த்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

ராஜேந்திர பாலாஜி, வருமானத்துக்கு அதிகமாக 7 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக மதுரையைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு இரு வேறு தீர்ப்புகளை வழங்கியது. இதையடுத்து இந்த வழக்கு மூன்றாவது நீதிபதியான நிர்மல் குமாரால் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ஆஜரான அரசுத் தலைமை வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, ராஜேந்திர பாலாஜி வருமானத்துக்கு அதிகமாக 73 சதவீதம் வரை சொத்து சேர்த்துள்ளதாக குற்றம்சாட்டினார். அரசு வழக்கறிஞரின் இந்தக் குற்றச்சாட்டுக்கு எழுத்துப்பூர்வமான வாதத்தை தாக்கல் செய்ய ராஜேந்திர பாலாஜி தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து வழக்கை செப்டம்பர் 8ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி நிர்மல்குமார் உத்தரவிட்டார்.