2 சொகுசு கார் மற்றும் 2 சொகுசு பங்களா... அதிரவைக்கும் பப்ஜி மதன்!! விசாரணையில் மிரண்டு போன சைபர் க்ரைம் போலீஸ்!! 

பப்ஜி மதன் ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்டு சம்பாதித்த பணத்தில் 2 சொகுசு கார் மற்றும் 2 சொகுசு பங்களாவை வாங்கியிருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

2 சொகுசு கார் மற்றும் 2 சொகுசு பங்களா... அதிரவைக்கும் பப்ஜி மதன்!! விசாரணையில் மிரண்டு போன சைபர் க்ரைம் போலீஸ்!! 
பப்ஜி விளையாட்டில் ஆபாசமாக பேசி யூட்யூபில் நேரலை ஒளிபரப்பு செய்து வந்தவர் மதன். தொடர்ந்து  பெண்கள் மற்றும் குழந்தைகள் குறித்து தகாத வார்த்தையால் பேசி  பதிவிட்டு வந்த மதன் மீது சமூக வலைத்தளங்களில்  கண்டனங்கள் கிளம்பியது. குறிப்பாக மதன் மீது  நடவடிக்கை எடுக்கக்கோரி  புளியந்தோப்பு சைபர் கிரைம் பிரிவு போலீஸாரிடம் இரண்டு புகார்கள்  வந்தது. 
 
இதனையடுத்து புகாரின் அடிப்படையில் போலீசார் மதனை நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினர். ஆனால் மதன் நேரில் ஆஜர் ஆகாததால் போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். குறிப்பாக மதன் வி.பி.என் சர்வரை பயன்படுத்தி செல்போன் உபயோகிப்பது, நேரலை செய்வது என்றிருப்பதால் போலீசார் யூ-டியூபர் மதனை நெருங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பப்ஜி மதன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைமிலும் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து புளியந்தோப்பு சைபர் கிரைம் பிரிவு மற்றும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் இணைந்து மதனை தீவிரமாக தேடி வருகின்றனர். மதன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைமில் கொடுக்கப்பட்டிருந்த ஒரு புகாரில் 4 பிரிவுகளில் மதன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. புளியந்தோப்பு சைபர் பிரிவில் இருந்த 2 புகார்களும் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம்மிற்கு மாற்றப்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் பப்ஜி மதன் மீது தமிழகம் முழுவதும் ஏராளமான ஆன்லைன் மூலம் காவல்துறைக்கு புகார்கள் வர தொடங்கியுள்ளது. குறிப்பாக தமிழக காவல்துறைக்கு இதுவரை 159 ஆன்லைன் புகார்கள் பப்ஜி மதன் மீது வந்துள்ளதாக தமிழக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. அந்த புகார்களை அந்தந்த மாவட்டத்தில் இருக்கும் சைபர் பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
 
இந்த நிலையில் யூ-டியூபர் மதனின் தந்தை, அவரின் அண்ணன்,அவரின் மனைவி கிருத்திகாவை அழைத்து வந்து சென்னை சைபர் கிரைம் போலீசார் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வைத்து தொடர் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்டு பல கோடி சொத்துக்களை குவித்த பப்ஜி மதன், வீடியோ மூலம் ஒரு மாதத்திற்கு 7 லட்ச ரூபாய் சம்பாதிப்பதாக விசாரணையில் தகவல். மேலும், பப்ஜி வீடியோ வெளியிட்டு சம்பாதித்த பணத்தில் 2 சொகுசு கார் மற்றும் 2 சொகுசு பங்களாவை வாங்கியிருப்பதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து மதனின் யூடியூப் சேனலின் நிர்வாகியாக அவரது மனைவி கிருத்திகா செயல்பட்டது தெரியவந்தது. மேலும் மதனின் வீடியோக்களை யூடியூப்பில் பதிவிடுவது கிருத்திகா தான் என தெரியவந்தது.இதனையடுத்து மதனுக்கு உடந்தையாக இருந்ததாக கிருத்திகாவை மத்திய குற்றபிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட கிருத்திகாவை போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.