அக்குபஞ்சர் அஜாக்கிரதை; இருதய நோயாளி உயிரிழப்பு! கிளினிக்கை முற்றுகையிட்ட மக்கள்..!

அக்குபஞ்சர் அஜாக்கிரதை; இருதய நோயாளி உயிரிழப்பு! கிளினிக்கை முற்றுகையிட்ட மக்கள்..!

திருப்பூரில் அக்குபஞ்சர் சிகிச்சையளிப்பவரின் அஜாக்கிரதையால் இருதய நோயாளி உயிரிழந்ததை அடுத்து அவரது கிளினிக்கை பொது மக்கள் முற்றுகையிட்டுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் கோவை -திருச்சி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் ரிஷி அக்குபஞ்சர் சென்டர் என்ற மினி கிளினிக் கடந்த 1 வருடத்திற்கு  மேலாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் பல்வேறு உடல் உபாதைகளுக்கான இங்கு சிகிச்சைகளை மேற்கொண்டு வந்துள்ளனர். 

இந்நிலையில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு பட்டேல் சாலை பகுதியை சேர்ந்த சம்பத் என்பவர் இருதய அடைப்பு காரணமாக உயிர் இழந்தார். இதற்கு இந்த மருத்துவர் சித்தார்த்தன் என்பவர் அஜாக்கிரதையான முறையில் செயல்பட்டது தான் காரணம் எனக் கூறப்படுகிறது. இருதய நோயாளி சம்பத்திற்கு ஆஞ்சியோ செய்த பிறகு அவருக்கு அக்கு பஞ்சர் சிகிச்சை கொடுத்ததாகவும், ஆபத்தான நிலையிலும் மருத்துவமனைக்கு செல்ல பரிந்துரை செய்யாமல் தடுத்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் சம்பத் அவசர நேரத்தில் தொடர்பு கொண்ட போது போன் கூட எடுக்காமல் வெளிமாநிலத்தில் இருப்பதாக கூறியதாக கூறியுள்ளார். அதனை நம்பி அவரும்  காத்து இருந்ததாகவும் இதன் காரணத்தினால் அவர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.  இதனையடுத்து அவரது உறவினர்கள் அக்கு பஞ்சர் சென்டரை முற்றுகையிட்டனர். இதனையடுத்து சம்வ இடத்திற்கு வந்த பல்லடம் போலீசார் சம்பத் மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிக்க:ஆளுங்கட்சிக் கூட்டணி ஆலோசனை கூட்டம்; டெல்லி செல்லும் எடப்பாடி பழனிச்சாமி!