30 டன் ரேஷன் அரிசி பதுக்கி கடத்த முயற்சி... லாரியில் ஏற்றும்போது மாட்டிய நபர்கள்...

30 டன் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து லாரியில் ஏற்றும் போது  கையும் களவுமாக போலீசார் மடக்கி பிடித்து இரண்டு லாரி உட்பட பறிமுதல் செய்து ஐந்து நபர்கள் கைது.

30 டன் ரேஷன் அரிசி பதுக்கி கடத்த முயற்சி... லாரியில் ஏற்றும்போது மாட்டிய நபர்கள்...

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே  எதலவாடி கிராம எல்லைக்கு உட்பட்ட விவசாயி நிலப் பகுதியில்  பெரிய தகர ஷீட் போட்ட பெரிய குடோன் அமைத்து அதில் 30 டன் ரேசன் அரிசியை பதுக்கி வைத்து வெளி வெளி மாநிலம், மாவட்டத்திற்கும்  லாரியில் மற்றும் மினி லாரியில்  ஏற்றுவதற்காக 3 உளுந்தூர்பேட்டை சரக டிஎஸ்பி மணிமொழியன் அவர்களின் ரகசிய தகவலின்படி விரைந்து சென்று சம்பவ இடத்திற்கு  இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில் காவலர்கள், மற்றும் தனிப்பிரிவு போலீசார்கள் அழகு செந்தில், தன்ராஜ்,  காவல் துறையினர நேரில் சென்று  வளைத்து சுற்றி வளைத்து கையும் களவுமாக 30 டன் அரிசி ஐந்து நபர்களை மடிக்க பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

போலீசார் விசாரணையில் நிலத்தின் உரிமையாளர்  உறையூர் கிராமத்தைச் சேர்ந்த அந்தோணிசாமி மகன் மாசிலாராணி  வயது 47, நத்தாமூர் கிராமத்தைச் சேர்ந்த முத்து மகன் சிவப்பிரகாசம் வயது 29, திருக்கோவிலூர் தாலுகா மொகலார் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஏழுமலை மகன் ராமமூத்தி வயது 25, சின்னசாமி மகன்  முத்து வயது 45, மற்றும்   லாரி லாரி ஓட்டுனர் மற்றும் உரிமையாளர் T.தேவனூர் கிராமத்தைச் சேர்ந்த பச்சமுத்து மகன்  சக்திவேல் வயது 33 ஆகிய ஐந்து நபர்களையும் கைது செய்தனர்.

ரேஷன் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்திய இரண்டு லாரிகளும், 30 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்து விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள  அரிசி கடத்தல் பிரிவு காவல் துறையிடம் ஒப்பத்தனர்.

தொடர்ந்து இந்த பகுதியில் ஏழை எளிய மக்களின் பசியைப் போக்க கூடிய ரேஷன் அரிசி கடத்தல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதனால் இவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.