விருதுநகர்: சிறையில் சாதி பாகுபாடு! கைதிகள் மாற்றம்!

விருதுநகர்: சிறையில் சாதி பாகுபாடு! கைதிகள் மாற்றம்!

விருதுநகர் மாவட்ட சிறைச் சாலையில் பாகுபாடு காட்டப்படுவதாக கைதிகள் சிறைத் துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சிறைக் கைதிகளுக்குரிய வசதி செய்து தருவதில் பாகுபாடு காட்டப்படுவதாக கூறி விருதுநகர் மாவட்ட சிறையில் கைதிகள் சிறைத் துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதனைத் தொடர்ந்து 20க்கும் மேற்பட்ட கைதிகள் மதுரை மத்திய சிறைக்கு மாற்றம்.

விருதுநகர் மாவட்ட சிறைச்சாலையில் 200 கைதிகளை அடைத்து வைப்பதற்கான வசதிகள் உள்ளன. ஆனால்  இங்கு 255 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான சிறைச்சாலைகளில்  இடநெருக்கடியும், உரிய அடிப்படை வசதிகளும் இல்லாமலே இருந்து வருகிறது. ஆனால், விருது நகர் மாவட்ட சிறையில் கூடுதலாக சாதிய பாகுபாடும் பார்க்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இன்று விருதுநகர் சிறையில் அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதில் சாதிய பாகுபாடு கடைபிக்கப்படுவதை கண்டித்து  சிறை அலுவலருடன் கைதிகள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் சிறைச்சாலை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு 50 க்கும் மேற்பட்ட கலவர தடுப்பு போலீசார் குவிக்கப்பட்டனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சிறைத் துறை அதிகாரிகள் கைதிகளிடம் தெரிவித்தனர். இருப்பினும் அவர்கள் தொடர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து 20 க்கும் மேற்பட்ட கைதிகள் மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர்.

இதையும் படிக்க:அடுத்தக்கட்ட ஆளுமைகள்!