பிரபல ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் மகனின் வலைதள பக்கத்தை ஹேக் செய்த கில்லாடிகள்…!

ஓய்வு பெற்ற டிஜிபி மகன் சமூக வலைதளம் மற்றும் ஜிமெயில் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

மணப்பாக்கத்தில் உள்ள ரிவர் வியூ அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் விக்ரம் ஜாங்கிட். ஓய்வுபெற்ற டிஜிபியான ஜாங்கிட்-ன் மகன் ஆவார். இவர் மணப்பாக்கத்தில் விளையாட்டு மையம் ஒன்றை தொடங்கி நடத்தி வருகிறார். இச்சூழலில் விக்ரம் ஜாங்கிட் நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அப்புகாரில், தனது விளையாட்டு மையத்தில் பணியாற்றிய முன்னாள் ஊழியர்களான சுல்தான், சந்தோஷ் ஆகிய இருவர், எனது அலுவலகத்தில் அனுமதியின்றி நுழைந்து, எனது கணினி மூலம் மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தியதாகவும், அலுவலகத்தில் வைத்திருந்த 6 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தையும் திருடியுள்ளதாகவும் கூறி, உரிய நடவடிக்கை எடுக்க  கோரி புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் மற்றும் ஜிமெயில் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் உள்ள தகவல்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் புகார் தெரிவித்துள்ளார். இந்த புகார் குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் கிரைம் போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.