காஷ்மீர் ஆப்பிள் வியாபாரிக்கு ரூ.1.5 கோடியை தராத சென்னை பழ வியாபாரி கைது!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான ஆப்பிள் பழங்களை வாங்கி பணம் தராமல் ஏமாற்றிய சென்னை பழ வியாபாரியை கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் தினகரன். இவர் கோயம்பேடு அண்ணா மார்க்கெட்டில் மொத்த வியாபார ஆப்பிள் கடை நடத்தி வருகிறார்.  கடந்த 2018ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள உசாம் ப்ரூட்ஸ் என்ற ஆப்பிள் நிறுவனத்தில் ஒன்றரை கோடி ரூபாய்க்கு ஆப்பிள் வாங்கியுள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக ஆப்பிள் வாங்கிய தொகையான ஒன்றரை கோடியை தராமல் தினகரன் அந்த நிறுவனத்தை ஏமாற்றி வந்துள்ளார்.

இது தொடர்பாக ஆப்பிள் நிறுவனத்தின் உரிமையாளர் ஜம்மு காஷ்மீர் ஷோபியன் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் தினகரன் மீது போலீசார் வழக்குபதிவு செய்து தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் விருகம்பாக்கத்தில் வீட்டில் பதுங்கியிருந்த தினகரனை மதுரவாயல் போலீசாரின் உதவியோடு ஜம்மு காஷ்மீர் சோபியன் போலீசார் கைது செய்தனர்.