வீட்டில் காசு தராததால், ஏடிஎம்ஐ உடைத்த சிறுவன்!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே ஏ டி எம் இயந்திரத்தை சுத்தியால் உடைத்த இளைஞரை போலிசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம்  பேருந்து நிலையத்தில்   உள்ள பிஸ்மில்லா பழமண்டி ,கிருஷ்ணா எஸ்ன்ஸ் மார்க்கெட் மற்றும் DBS என்கின்ற தனியார் BANK ATM ஆகிய இடங்களில் கடந்த வாரம் ஒரே இரவில் மூன்று இடங்களில் கொள்ளைச் சம்பவம் நடைபெற்றதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் உடனடியாக  தனிப்படை அமைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை  கைது செய்ய வேண்டுமென உத்தரவிட்டார்  அதன் பேரில் மூங்கில்துறைப்பட்டு காவல் உதவி ஆய்வாளர் சிவச்சந்திரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தனிப்படை  போலீசார் கடந்த 8 நாட்களாக  தீவிரமாக விசாரணை மேற்கொண்டு கொள்ளையனை தேடி வந்த நிலையில், தனிப்படை போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், கொள்ளையன் ஒருவன், பேருந்து நிலையத்தில் உள்ள ஏடிஎம் மிஷினை உடைத்து கொள்ளையடிக்க முயன்றதாகவும், ஏடிஎம் மிஷினை உடைக்க முடியாததால் அருகிலுள்ள பிஸ்மில்லா பழமண்டியில் ஒரு ரூபாய் ,இரண்டு ரூபாய் மற்றும் ஐந்து ரூபாய் காயின்கள் சுமார் 5000 ரூபாய் திருடு போனதாகவும் அதே போல கிருஷ்ணா எசன்ஸ் மார்க்கெட்டில்  8000 ரூபாய் திருடு போனதாகவும் தனிப்படை போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. 

இதனை தொடர்ந்து  ஏடிஎம் அறையில் உள்ள சிசிடிவி கேமராக்களில் உள்ள சிசிடிவி காட்சிளை கைபற்றி விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், விசாரணையில் சி சி டி வி காட்சிகளின் அடிப்படையில்     சங்கராபுரம் பேருந்து நிலையம் அருகே 17 வயது மதிக்கத்தக்க வாலிபர் சந்தேகப்படும்படி சுற்றி திரிந்தது தெரியவந்துள்ளது.  

அவரைப் பிடித்து தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டதில், வீட்டில் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டதாகவும், அப்போதும் பணம் தர மறுத்ததால் சங்கராபுரம்  பேருந்து நிலையத்தில் உள்ள தனியார் வங்கி ஏ டி எம் இயந்திரத்தை சுத்தியால் உடைத்து பணத்தை திருட முயன்றதாகவும், ஆனால் ஏ டி எம் இயந்திரத்தை உடைக்க முடியாததால் அங்கிருந்து புறபட்ட வாலிபர் பணத்தாசையில் அருகே இருந்த பழமண்டி மற்றும் எசன்ஸ் கடையில் திருடியதாகவும், மேலும் திருடியதை போலிசார் கண்டு பிடித்துவிடுவார்கள் என  எண்ணி கடையில் இருந்த மிளகாய் பொடியை தூவி சென்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து போலிசார் 17 வயது வாலிபரை கைது செய்து விழுப்புரம் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கடலூர் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்தனர்.

பெற்றோர் செலவுக்கு பணம் தரவில்லை என்பதற்காக 17 வயது சிறுவன் ஏடிஎம்ஐ உடைத்தும் இரண்டு கடைகளில் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.