சிட்பண்டில் மோசடி: நிதி நிறுவனர் தற்கொலை: ஏமாந்தவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு..!

சிட்பண்டில் மோசடி: நிதி நிறுவனர் தற்கொலை:  ஏமாந்தவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு..!

செங்கல்பட்டில் சிட்ஃபண்டு நடத்தி மோசடி செய்து தற்கொலை செய்கொண்டவரின் குடும்பத்திடம் இருந்து, பணத்தை திரும்பக்கேட்டு சீட்டு கட்டியவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். 

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பஜார் பகுதியில் யுவஸ்ரீ பைனான்ஸ் மற்றும் ஏகே ஜுவல்லரியை நடத்தி வந்த அனந்தகிருஷ்ணன் என்பவர் கடந்த நான்காம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

  செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் இரண்டு திருமண மண்டபகள்,  Ak  நகைக்கடை நிதி நிறுவனம் மற்றும் நகை சீட்டு நடத்தி வந்த அதன் உரிமையாளர்  ஆனந்த கிருஷ்ணன் (50) S/o கிருஷ்ணன், என்பவர் அவருடைய திருமண மண்டபத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இவர் பல கோடியில் ஏல சீட்டும் மற்றும் நகை சீட்டும் பிடித்து வந்துள்ளார்.  இவருக்கு தற்போது சீட்டு வாடிக்கையார்களுக்கு கோடி சீட்டு பணம் கடன் உள்ளதால் இவருடைய தற்கொலைக்கு கடன் தொல்லையா அல்லது கடனால் இவரை யாராவது மிரட்டியதால் தற்கொலை செய்து கொண்டாரா?   என பல்வேறு கோணங்களில் மதுராந்தகம் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இவர் நடத்தி வந்த யுவ ஸ்ரீ பைனான்ஸில் மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் சீட்டு பணம் மற்றும் நகைச்சீட்டு கட்டி வந்துள்ளனர். இதனிடையே ஆனந்த கிருஷ்ணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் அவரது அலுவலகம் கடைகள் ஆகியவற்றை மூடியுள்ளனர்.

இதனால் சீட்டு பணம் கட்டியவர்கள் அனந்த கிருஷ்ணனின் உறவினர்களிடம் சென்று கேட்டுள்ளனர். அப்போது அவர்கள் பணத்தை திருப்பி தர முடியாது என கூறியதாக சொல்லப்படுகிறது. இதில் பொதுமக்கள் வியாபாரிகள் என ஒரு லட்சம் முதல் 25 லட்சம் ரூபாய் வரை பணத்தை கட்டியுள்ளனர்.

இதனால் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அதில் அனந்த கிருஷ்ணன் என்பவர், சுமார் 30 கோடிக்கு மேல் பணத்தைப் பெற்று சொகுசு வீடு, திருமண மண்டபம் உள்ளிட்டவற்றை கட்டி உள்ளதாகவும், தாங்கள் பணத்தை செலுத்தியதற்கான ஆவணங்கள் அனைத்தும் உள்ளதாகவும், அனந்த கிருஷ்ணனின் சொத்துக்களை ஜப்தி செய்து தங்களுடைய பணத்தை மீட்டு தருமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிக்க   | ”பிரதமர் பதவிக்கு காங்கிரஸ் ஆசைப்படவில்லை" மல்லிகார்ஜூன கார்கே பேச்சு!