அமெரிக்காவில் சோழர் காலத்து சிலை கண்டுபிடிப்பு...!

அமெரிக்காவில்  சோழர் காலத்து சிலை கண்டுபிடிப்பு...!

தமிழ் நாட்டிற்கு சொந்தமான சோழர் காலத்தை சேர்ந்த கலிய மர்த்தன கிருஷ்ணர் உலோக சிலை அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த சிலை விரைவில் மீட்கப்படும் என்றும் சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். 

தமிழ் நாட்டிற்கு சொந்தமான சிலைகளை தனிப்படை அமைத்து வெளிநாட்டு இணையதளங்களை ஆய்வு செய்து சிலைக் கடதல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்த் வருகின்றனர்.  தனிப்படையினர் மேற்கொண்ட தொடர் முயற்சியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிற்காலச் சோழர் காலத்தைச் சேர்ந்த கலிய கல்கி என்ற கலிய மர்த்தன கிருஷ்ணர் (பாம்பின் மேல் நடனம் செய்யும் கிருஷ்ணர்) உலோக சிலை அமெரிக்கா நாட்டில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Angela S Chiu on X: "Douglas Latchford, who has just been indicted by the  US for trafficking looted antiquities, gave an interview to Apollo magazine  published back in Nov 2008. The article

லூயிஸ் நிக்கல்சன் என்பவரால்   “Gold of the Gods" என்ற ஒரு கட்டுரையில் ’கலிய கல்கி’ என்ற கலிய மர்த்தன கிருஷ்ணர் உலோக சிலையின் புகைப்பட படத்தை சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவினர் கண்டறிந்தனர். அந்த சிலை அமெரிக்கவில்  HSI என்ற அமைப்பில் இருப்பதாக சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு தனிப்படையினரால் கண்டறியப்பட்டது.

மேலும்  இந்த சிலை கடந்த 2005 ஆம் ஆண்டு சிலைக் கடத்தல் மன்னன் சுபாஸ் கபூர் என்பவரால் இந்திய சந்தை மதிப்பில் 5 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு விறகப்பட்டது தெரியவந்திருக்கிறது.

சிலை திருட்டு வழக்கில் கடத்தல் மன்னன் சுபாஷ்கபூர் மீண்டும் கைது | Subhash  Kapoor again arrested statue smuggling case

இந்த சிலை சோழர் காலமான 11 மற்றும் 12 ஆம் நூற்றண்டை சேந்தது என கண்டறிப்பட்டுள்ளது. அதனை மீட்பதற்க்கான ஆவணங்களை சேகரித்து மீட்க நடவடிக்கை எடுத்து வருவதாக சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவினர் சார்பில் ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க   |  ” காவல்துறை திமுகவின் ஏவல்துறையாக செயல்படுகிறது” - அண்ணாமலை கருத்து.