இளைஞரை அடைத்து வைத்து சித்ரவதை; மூவா் கைது!

இளைஞரை அடைத்து வைத்து சித்ரவதை; மூவா் கைது!

நாகப்பட்டினம்: நாகையில் வெளிநாட்டில் இருந்து வந்தவரை கொடூரமாக தாக்கிய 3 பேர் கைது

நாகப்பட்டினம் மருந்து கொத்தல காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கணேஷ் குமார். இவரது மகன் சந்தோஷ் சிவம் (23). இவர் துபாய் நாட்டில் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் சந்தோஷ் சிவம் துபாயில் இருந்து சொந்த ஊரான நாகப்பட்டனத்திற்கு வந்துள்ளார்.அப்பொழுது, தன்னோடு துபாயில்  வேலை பார்த்த வாசிம் என்பவர் சில பார்சல்களை கொடுத்து நாகூரில் உள்ள தனது உறவினர்களிடம் கொடுக்க சொல்லி அனுப்பி உள்ளார். ஆனால் சந்தோஷ் சிவம்  அந்த பார்சல்களை உறவினர்களிடம் கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. 

இதனையடுத்து, வாசிமின் உறவினரான பாசித், சந்தோஷிடம் பார்சலை கேட்டுள்ளார். பார்சலை  சென்னை விமான நிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விட்டார்கள் என கூறியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பாசித் மற்றும் அவரது நண்பர்கள் சந்தோஷ் சிவத்தை நாகப்பட்டினத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதிக்கு அழைத்துச் சென்று அவரை அடைத்து வைத்து கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும், அவருக்கு மொட்டையடித்து, அவரின் செல்போன் மற்றும் தங்க மோதிரங்களை பறித்துக்கொண்டு துரத்தியுள்ளனர். 

அவர்கள் தாக்கியதில் கண்ணில் பலத்த காயமடைந்த சந்தோஷ் சிவம்  நாகப்பட்டினம் அரசு மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். சந்தோஷின் புகாரின் பேரில், புகாரின் பேரில் நாகூரைச் சேர்ந்த முகமது அப்ரார், நரேந்திரநாத், முகம்மது யூசுப் ஆகியோரை கைது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலைமறைவான பாசித் என்பவரை  தேடி வருகின்றனர். 

இது குறித்து சந்தோஷிடம் விசாரித்தபொழுது, வாசிம் கொடுத்த அனுப்பிய பார்சலில் 400 கிராம் தங்க நகைகள் இருந்துள்ளதாகவும் அதை சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாகவும் கூறியுள்ளார். உண்மையில்,பார்சலை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனரா,அல்ல பார்சலில் தங்கம் இருப்பதை அறிந்து கொடுக்காமல் ஏமாற்றினாரா என்பது குறித்து போலிசார் விசாரனைக்குப் பின் தெரியவரும்.