எல்லையில் வெடித்த குக்கர் வெடிகுண்டு - இரண்டு பேர் படுகாயம்

தமிழ்நாடு-கேரள எல்லையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை

எல்லையில் வெடித்த குக்கர் வெடிகுண்டு - இரண்டு பேர் படுகாயம்

ஆட்டோவில் வெடித்த வெடிகுண்டு

கர்நாடக மாநிலம் மங்களூரில் நேற்று முன்தினம் ஆட்டோ வெடித்து சிதறியதில், அதில் பயணித்த ஒரு நபரும், ஆட்டோ ஓட்டுநரும் காயம் அடைந்தனர். இது தொடர்பாக, போலீசார் விசாரணை நடத்திய போது இது திட்டமிட்ட சதி செயல் எனவும் ஆட்டோவில் வெடித்தது குக்கர் வெடிகுண்டு எனவும் தெரியவந்தது.

கண்காணிப்பை தீவிர படுத்த டிஜிபி உத்தரவு

குக்கர் குண்டு வெடிப்பை தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் கண்காணிப்பை தீவிர படுத்த டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்த சூழலில் மங்களூர் வெடி விபத்து தொடர்பாக, தமிழ்நாட்டில் உள்ள உதகை மாநிலத்தை சேர்ந்த ஒருவரை பிடித்து தமிழ்நாடு காவல்துறையினர் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாக்குதலுக்கு திட்டமிட்டவருடன் தொடர்பு

இந்த நிலையில், வெடிகுண்டு தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட நபரும், உதகையில் கைது செய்யப்பட்ட நபரும் ஒரே அறையில் தங்கி இருந்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, இது தொடர்பாக போலீசார் உதகையில் பிடிபட்ட நபரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் சூழலில், தமிழ்நாடு - கேரள எல்லைப் பகுதிகளில் தற்போது போலீசாரின் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது.

மெட்டல் டிடக்டர் கருவி மூலம் சோதனை

குறிப்பாக, தமிழ்நாடு - கேரளா எல்லை பகுதியான புளியரை, மேக்கரை உள்ளிட்ட பகுதிகளில் தற்போது துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்களை வைத்து தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க: தாலி கயிற்றால் கழுத்தை நெரித்து கொடூர கொலை..!

கேரளாவில் இருந்து தமிழ்நாட்டை நோக்கி வரும் வாகனங்களையும், தமிழ்நாட்டில் இருந்து கேரளா நோக்கி செல்லும் வாகனங்களையும் முறையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அவர்களது உடைமைகளை மெட்டல் டிடக்டர் கருவி மூலம் சோதனை செய்த பிறகே அவர்கள் செல்ல காவல்துறையினர் அனுமதிக்கின்றனர்.

எல்லையில் பரபரப்பு

பொதுவாக, தமிழ்நாடு - கேரளா எல்லைப் பகுதியான புளியரை வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்றுவரும் சூழலில், தற்போது புளியரை சோதனை சாவடியில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு துப்பாக்கி ஏந்தியபடி போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வரும் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.