"குற்றம்" நடந்தது என்ன?.. "மனித சங்கிலி போல் கள்ள நோட்டு சங்கிலி".. 4 பேர் அதிரடியாக கைது!!

சென்னையில், கள்ளநோட்டு கும்பலை சேர்ந்த 4 பேரை கைது செய்துள்ள காவல்துறையினர், 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

"குற்றம்" நடந்தது என்ன?.. "மனித சங்கிலி போல் கள்ள நோட்டு சங்கிலி".. 4 பேர் அதிரடியாக கைது!!

கிண்டியை அடுத்த மடுவின்கரையில் உள்ள டாஸ்மாக் கடையில் கள்ளநோட்டை கொடுத்து மதுபானம் வாங்க முயன்ற திருவல்லிக்கேணியை சேர்ந்த அஜாஸ் என்பவர் கடந்த 17-ம் தேதி கைது செய்யப்பட்டார்.

விசாரணைக்குப் பின் அவரது நண்பர் அம்ருதின் கைது செய்யப்பட்டு 19 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர் விசாரணையில் மாமண்டூரைச் சேர்ந்த ராஜி என்பவரிடம் இருந்துதான் கள்ளநோட்டுகளை வாங்கியது தெரிய வந்தது. 

இதையடுத்து ராஜி மற்றும் அவரது கூட்டாளிகளான பிரபு, ஷாயின்ஷா மற்றும் ஹயதுல்லா ஆகிய 4 பேரை தனிப்படை கைது செய்தது. அவர்களிடம் இருந்து 2 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பிலான 200 மற்றும் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. ரகு என்பவர்தான் கள்ள நோட்டு சப்ளையின் முக்கிய நபர் என்பது தெரிய வந்துள்ளது. தற்போது புதுச்சேரி காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அவரை காவலில் எடுத்து விசாரிக்க தனிப்படையினர் திட்டமிட்டுள்ளனர்.