உயிரோடு விளையாடும் ஒருதலைக் காதல்.. " கிரைம் ஸ்டோரி"  

"காதல்." இந்த மூன்றெழுத்தை நினைத்தாலே உதட்டில் தேனூறும்.  பார்த்தாலே இதயம் துடிக்கும். பார்வைக்குள் ஊடுருவி உள்ளத்துக்குள் புகுந்து இன்பத்தில் மூழ்கி நீச்சலடிக்கும். காதல்தொட்டால் மலரும். காதல்தொடாமல் வளரும்

உயிரோடு விளையாடும் ஒருதலைக் காதல்.. " கிரைம் ஸ்டோரி"  
காதலுக்கு கண்ணில்லை . ஆனால் கண்ணுக்குள் காதலுண்டு. இந்த இளம் காதலிருக்கே..அப்பப்பா.. . இரவில் தூக்கம் வராது. பகலில் கனவுவிடாது.  தொட்டால் மெல்லினமாவாள். அணைத்தால் இடையினமாவாள். மறுத்தால் வல்லினமாவாள். பக்கம் வந்தால் உயிர் ஆவாள். வெட்கம் வந்தால் மெய் ஆவாள். ஒன்றெனக் கலந்தாள் உயிர்மெய் ஆவாள். மொத்தத்தில் அவனுக்கு அவள் தமிழாவாள். காதல் கடலில் மூழ்கி மீண்டாரும் உண்டு. மாண்டாரும் உண்டு. சில நேரங்களில் அதுவும் கொலையில் போய்விட்டு விடுகிறது.
 
சில வருடங்களுக்கு முன்பு...
 
சுவாதி என்ற இளம் மென்பொறியாளரை மறந்திருக்க முடியாது. காதலர் மறந்தாலும் காதல் மறந்திருக்காது. அன்று நுங்கம்பாக்கம் ரெயில்நிலையத்தில் ரெயிலுக்கு காத்திருந்தவர்களில் சுவாதியும் ஒருவர்.திடீரென்று பின்னால் இருந்த ஒருவன் சுவாதியை சரமாரியாக வெட்டி வீழ்த்திவிட்டு தப்பிவிட்டான். 3 மணிநேரம் ரத்தவெள்ளத்தில் பிளாட்பாரத்தில் பிணமாகக் கிடந்தார் சுவாதி. கடைசியாக போலீஸ் வந்தது. சுவாதி உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

 
அவனுக்கு அவள் தமிழாவாள்
 
இந்த வழக்கை சென்னை காவல்துறை கையில் எடுத்தது. செங்கோட்டைக்கு சென்ற போலீஸ் குற்றவாளி ராம்குமாரரை பிடிக்க முயன்ற போது பிளேடால் தனது கழுத்தை அறுத்துக்கொண்டான், முதல் சிகிச்சைக்குப் பிறகுஅவனை சென்னைக்கு அழைத்து வந்த போலீஸ் அவனிடம் வாக்குமூலம் வாங்கியது. என் காதலை சொல்லி எவ்வளவோ கெஞ்சி பார்த்தும் தன்னிடம் "ஐ லவ் யூ" சொல்லாததால் ஒரு தலைக்காதல் வெறியில் அவளை கொலை செய்ததாக அவன் வாக்கு மூலம் கொடுத்தான்.அவனை கைது செய்த போலீஸ் சிறையில் அடைத்தது.ஓர் நாள் சிறைக்குள் மின்சாரத்தை உடலில் பாய்ச்சி தற்கொலைசெய்துகொண்டான்.அவனோடு அந்த வழக்கும் சமாதியாகிப்போனது.
 
ஒரு தலைக் காதல் வெறியால் நவீனா கொலை செய்யப்பட்டதுதான் கொடூரமானது.விழுப்புரம்,
வ. பாளையத்தை சேர்ந்த நவீனாவிற்கு 17 வயது. பிளஸ் 2 மாணவி. மாம்பழப்பட்டு கிராமத்தை சேர்ந்த மினி பஸ் டிரைவர் செந்திலுக்கு அவள் மீது ஒரு தலைக் காதல்.. நவீனாவிடம் ஒருநாள் மனம்திறந்தான்.நான் உன்னை காதலிக்கிறேன். "நீ ஐ லவ் யு "சொல் என்று கூறினான். உனக்கு 30 எனக்கு 17 நமக்குள் காதல் வராது என்று கூறி மறுத்தாள்நவீனா..அவ்வளவுதான்.ஒரு நாள் பெட்ரோல் டின்னோடு நவீனா வீட்டிற்கு போனான். அவள் இருந்தாள். திடீரென்று பெட்ரோலை தன் உடல்மீது ஊற்றி தீவைத்து அவளைக் கட்டிப் பிடித்துக்கொண்டான்.
 
அங்கிருந்தவர்கள் தீக்காயங்களோடு அவர்களை  ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள்.அங்கு காதலன் பிழைத்துக்கொண்டான்.அவன் காதலித்த அவள் பரிதாபமாக இறந்துபோனாள்.
நமக்குள் காதல் வராது இந்த சோனாலியின் காதல் கதை சோகமானது. சோனாலி தந்தையை இழந்தவள். தாயுடன் மதுரை மானகிரியில் வசித்து வந்தாள். கரூர் பொறியியல் கல்லூரியில் 3 ஆம் ஆண்டு அவள் படித்து வந்த நேரம். கல்லூரி விடுதியில் தங்கி இருந்தாள்.உதயகுமாரும் அதே கல்லூரி மாணவன் தான். ஒரே வகுப்பில் படித்து வந்தார்கள். ஒருநாள் எதேச்சையாக உதயகுமாரைப் பார்த்து சிரித்திருக்கிறாள். காதலிக்கிறாள் என்று நினைத்துக்கொண்டான். 
 
சோனாலி..அவ்வளவுதான். ஒரு கட்டத்தில் தன் காதலை சோனாலியிடம் எடுத்துக் கூறினான் அவன்  ஆனால் அவள் அவன்காதலை ஏற்றுக்கொள்ள வில்லை.  உதயகுமாரின் நடத்தைக் சரியில்லை என்று கூறி கல்லூரி நிர்வாகம்அவனை சஸ்பெண்ட் செய்தது.. சில மாதங்கள் ஓடிப்போனது. ஒரு நாள் கல்லூரிக்கு வந்த உதயகுமார் முதல் மாடியில் உள்ள வகுப்பறைக்கு போனான் அங்கு அவள் இருந்தாள்.. பேராசிரியர் சதீஷ் பாடம் நடத்திக்கொண்டிருந்தார். சட்டென்று வகுப்பறையில் நுழைந்தவன் நேராக சோனாலியிடம் போனான்.நான் உன்னை மனதார காதலிக்கிறேன். நீ  ஐ லவ் யு சொல்லு என்று வற்புறுத்தினான். சோனாலிக்குஅவமானமாகி
விட்டது. 

 
"ஐஹேக் யு"
 
வேறு ஒருவரை காதலிக்கிறேன் முதலில் வெளியே போ என்றாள் சோனாலி.  அங்கு கிடந்த கட்டை அவன் கண்ணில் பட்டது. எடுத்தான். கண்மூடித்தனமாக சோனாலியை கட்டையால் தாக்கினான்.. பேராசிரியர் ஓடி வந்து தடுத்தார். அவருக்கும் அடி விழுந்தது. மாணவர்கள் அலறினார்கள்.அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான் உதயகுமார் .மயங்கி விழுந்த சோனாலியை மதுரை அரசு மருந்துவமனையில் சேர்த்தார்கள். சிகிச்சை பலனின்றி சோனாலி பரிதாபமாக இறந்துபோனாள். அவள் இறந்த சோகத்தின் விம்மல் அடங்கும் முன்பே தூத்துக்குடியில் ஆசிரியை பிரான்சினா ஒரு தலைக்காதலுக்கு பலியாகிப்போனாள்.
 
தூத்துக்குடியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக பணியாற்றி வந்த போது. சீகன் கோமஸ் என்பவன் அறிமுகமானான். திடீரென்று ஒருநாள் பிரான்சினாவிடம் வந்த அவன் உன்னை காதலிக்கிறேன் என்றுகூறினான்.. எனக்கு விரைவில்திருமணம்நடக்க உள்ளது என்று கூறி சீகனிடம் இருந்து ஒதுங்கிக்கொண்டார். ஆனால் அவன் விடாமல் விரட்டி விரட்டி காதலித்தான்.அவர் மசியவில்லை. ஒரு நாள் பள்ளிக்கூடத்திற்கு சென்ற அவன் "எனக்கு கிடைக்காத நீ வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது "என்று கூறி வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிவிட்டான். பின்னர் சீகன் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது தனிக்கதை.
 
பெருங்குடி ரெயில் நிலையம். காலை 8.30 மணி. ஒரு இளம் ஜோடி ரத்த வெள்ளத்தில் கிடப்பதாக  தகவல் கிடைக்கவே வேளச்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு ஓடோடி வந்தார்கள்.  அந்த பெண் இறந்துகிடந்தாள்.அவரோ உயிருக்குபோராடிக் கொண்டிருந்தார். இருவரையும் மருத்துவமனையில்கொண்டு போய் சேர்த்தார்கள்.  இறந்துகிடந்தவள் பெயர் வைசியா .மன்னார்குடியை சேர்ந்தவர். வேளச்சேரியில் தங்கி இருந்து சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தவர். 
 
உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவர் வெங்கடாசலபதி. இவரும் வைசியா வேலை பார்த்த நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர். வைசியாவை சில மாதங்களாக வெங்கடாசலபதி காதலித்து வந்தார். தன் காதலை வைசியா விடம் சொன்னபோது "நான் வேறு ஒருவரை காதலிக்கிறேன். இனிமேல் என்னை சந்திக்காதே என்று கண்டிப்புடன் கூறிவிட்டார். ஒரு நாள் தனியாக பேச வேண்டும் என்று வைசியாவை பெருங்குடி ரெயில்நிலையத்திற்கு வரச் சொல்லி இருக்கிறார். அங்கு இருவரும் மறைவான இடத்தில் நின்றுபேசிக்கொண்டிருந்தார்கள்.
 
என்னைக் காதலிக்காத நீ வேற எவனையும் காதலிக்கக் கூடாது என்று கூறிய வெங்கடாசலபதி வைசியாவை சரமாரியாக கத்தியால் குத்தினார். அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் அவர் இறந்துபோனாள். பிறகு தன்னைத்தானே கத்தியால் குத்திகொண்டு அப்படியே மயங்கி விட்டார். சிகிச்சை பெற்று வந்த வெங்கடாசலபதி கூறியதைக் கேட்ட போலீசார் அதிர்ந்து போனார்கள். அதேநேரத்தில் வெங்கடாசலபதியின் முன் காதல் கதை சுருக்கம் விசாரணை அதிகாரியை கதிகலங்க வைத்துவிட்டதாம்.
 
வெங்கடாசலபதி ஈரோடில் கல்லூரியில் படித்துக்கொண்டிந்தபோது பிரவீனா என்ற பெண்ணை காதலித்து வந்தார். அங்கேயும் ஒரு தலைக் காதல் தான். பிரவீனா அவரின் காதலை நிராகரித்துவிட்டார். பின் தாலிக் கயிறோடு பிரவீனா வீட்டிற்கு சென்றவர் அங்கு தகராறு ஏற்கனவே பிரவீனாவை குத்தி கொலை செய்து விட்டு தப்பிய அவர் போலீசிடம் மாட்டிக்கொண்டார். தகுந்த ஆதாரங்கள் இல்லாததால் அந்த வழக்கில் இருந்து தப்பிய வெங்கடாசலபதி சென்னை வந்து சாப்ட்வேர் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்துள்ளார். இதைக்கேட்ட போலீசார் வெலவெலத்து போய்விட்டார்களாம்.
 
நெல்லை மாவட்டம் வள்ளியூரில் துணிக்கடையில் வேலை பார்த்து வந்த மெர்சியின் மரணமோ வேதனைக்குரியது. அதே கடையில் பார்த்த போது மெர்சி மீது ரவீந்திரனுக்கு கொள்ளை காதல்..அந்த சமயத்தில் ரவீந்திரன் அந்த கடையில் இருந்து விலகிவிட்டார். பின்னரும் மெர்சியை விரட்டி விரட்டி காதலித்தார்.. ஐ லவ் யூ என்று சொல்ல மறுத்த அவரை வேலையில் இருந்து விடுதிக்கு திரும்பிக்கொண்டிருந்தபோது விரட்டி விரட்டி கொலை செய்துள்ளார்.
 
காதல் பூ போன்றது
 
சென்னை கே.கே நகரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார் அஸ்வினி. அழகேசன் என்பவர் காதல் பார்வை அஸ்வினி மீது விழுந்தது. அவர் கல்லூரிக்கு வரும் போதும், வீடு திரும்பும் போதும் தினமும் அவரிடம் ஐ லவ் யூ என்று சொல்லி வந்தார் அழகேசன்.அஸ்வினியோ காதலிப்பது எனக்கு பிடிக்காது என்று கூறி மறுத்துவிட்டார். எனக்கு பிடிக்குமே என்று கூறி பின்னாலேயே அலைந்து பார்த்தார். அஸ்வினி மறுக்கவேஒரு நாள் கல்லூரி வாசலில் காத்திருந்து அவர் வெளியே வரும் போது கல்லூரி வாசலிலேயே அவரை கொடூரமான முறையில் வெட்டிக்கொலை செய்துவிட்டார்.
 
காதல் பூ போன்றது. அது தானாக மலர வேண்டும். 
 
புனிதமானது. அது உள்ளத்திலிருந்து உதிக்க வேண்டும். மிரட்டி கடைக்காரரிடம் பணம் பெறலாம். காதலை பெற முடியாது. பஸ்ஸை தவறவிட்டால் தலை மூழ்கிவிடாது. அடுத்துவருவதில் ஏறி பயணத்தை தொடரலாம்..காதல் கைகூடவில்லை என்றால் முடிந்துவிடுவதல்ல வாழ்க்கை. அது சரி..இந்த காலத்தில் ஒரு தலை காதலாவது இரு தலை காதலாவது. 
 
பசங்களோடு சுத்துவது ஜாலிக்காக.. கடைசியில வீட்டில பாக்கிறவனோடு செட்டில் ஆயிடுவோம் - இது காதலி வழி....சும்மா.. டைம்பாஸிற்காக பொண்ணுங்களோடு சுத்துவோம் அப்புறம் பிடிச்ச பொண்ணோடு குடும்பம் வாழ்க்கைன்னு ஆகிட வேண்டியதுதான்- இது காதலன் வழி. இதுங்களோடு இருக்கிறதோட தற்கொலை பண்ணிக்கலாம் - இது காதல் வழி.