திருச்சி அருகே தீண்டாமை கொடுமை!

திருச்சி அருகே தீண்டாமை கொடுமை!

மணப்பாறை அருகே பட்டியலின மக்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்து, கொலை மிரட்டல் விடுத்த மாற்று சமூகத்தை சேர்ந்தவர்கள் மீது பாதிக்கப்பட்ட மக்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கோவில்பட்டி அருகே உள்ள கலர்பட்டியைச் சேர்ந்த பட்டியலினத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் அதே ஊரைச் சேர்ந்த மற்றொரு சமுதாயத்தைச் சேர்ந்த நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகின்றது. 

இதனால் இருசமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு இடையே சுமார் 3 மாதங்களுக்கு முன்பிருந்தே பிரச்சனை ஏற்பட்டு வருகின்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அப்பகுதியில் ஒரு முருகன் கோவில் இருப்பதாகவும்,  பட்டியலின மக்கள் அங்கு வழிபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. மற்றொரு சமூதாயத்தை சேர்ந்தவர்கள், அந்த கோவிலை இடித்துவிட்டதாக கூறப்படுகிறது.

மேலும், வரி வசூலிக்காமல், பட்டியலின மக்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். இதனிடையே, ஊரை விட்டு வேறு எங்கும் செல்லுமாறு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், தினமும் சமுதாய பேரை இழிவாக கூறுவதாகவும், இது குறித்து, சம்பந்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த 3 பேர் மீது நடவடிக்கை எடுக்குமாறு, பாதிக்கப்பட்ட பட்டியலின மக்கள், மருங்காபுரி வட்டாட்சியர் மற்றும் மணப்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதையும் படிக்க || ஒடிசா ரயில் விபத்து: தென்கிழக்கு ரயில்வே பொது மேலாளர் பதவி நீக்கம்!