கிரிப்டோ கரன்சி..!! மோசடி செய்த நபரின் வீட்டை முற்றுகையிட்ட மக்கள்..!!

கிரிப்டோ கரன்சி..!! மோசடி செய்த நபரின் வீட்டை முற்றுகையிட்ட மக்கள்..!!

கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்வதாக கூறி சுமார் 500க்கும் மேற்பட்டோரிடமிருந்து 120 கோடிக்கு மேல் மோசடி செய்த நபரின் வீட்டை முற்றுகையிட்டு பாதிக்கப்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை, போரூர் அடுத்த வானகரம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சந்திரசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை, போரூர், வடபழனி, தாச பிரகாஷ் ஆகிய மூன்று பகுதிகளில் முதலீடு செய்யும் நிறுவனத்தை வைத்து நடத்தி வந்துள்ளார்.

இதில் ஒரு லட்சம் ரூபாய் செலுத்தினால் 5% மாதம் வட்டி தருவதாக கூறி பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதனால் பலர் அந்த நிறுவனத்தில் தான் இணைந்தது மட்டுமல்லாமல் அவர்களது உறவினர்களையும் அதில் சேர்த்துள்ளனர். பின்னர் இந்த முதலீட்டை கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்யப் போவதாகவும் இதனால் தங்களுக்கு இரு மடங்கு வட்டி தர போவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். 

கடந்த இரண்டு வருடங்களாக வட்டி மற்றும் முதலீடு தராததால் சிலர் போலீசில் புகார் அளித்தனர். இதில் கைது செய்யப்பட்ட சந்திரசேகர் தற்போது ஜாமீனில் வீடு திரும்பியதால் பாதிக்கப்பட்டவர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர். அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

சம்பவத்தை அறிந்ததால் மதுரவாயல் போலீசார் விரைந்து வந்து சம்பவம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் நீங்கள் இதை சட்டரீதியாக சந்தியுங்கள் என்றும் அவர் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறி அவர்களை கலைக்க முயன்றனர். இதற்கு அவர்கள் செவி சாய்க்காததால் தற்போது வீட்டில் இருந்த சந்திரசேகரை போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்றுள்ளனர். இதனால் இப்பகுதியில் நீண்ட நேரமாக பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.