'4,000 லிட்டர் கள்ளச்சாராய ஊறல்கள் அழிப்பு' தமிழக ஆந்திர போலீசார் கூட்டு நடவடிக்கை!

'4,000 லிட்டர் கள்ளச்சாராய ஊறல்கள் அழிப்பு' தமிழக ஆந்திர போலீசார் கூட்டு நடவடிக்கை!

வாணியம்பாடி அருகே உள்ள தமிழகம் ஆந்திரா எல்லையில் 4000 லிட்டர் கள்ள சாராய ஊறலை அழித்து ஆந்திரா மற்றும்  தமிழகம் ஆகிய இரு மாநில போலீசார் அடங்கிய குழு நடவடிக்கை எடுத்துள்ளது. 

கடந்த மாதம் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி பலர் உயிரிழந்தனர். இதனையொட்டி தமிழ்நாடு எங்கும் கள்ளச்சாராயத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட கண்காணிப்பாளர்கள் வழிகாட்டுதலின் அடிப்படையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் கைது செய்யப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே  தமிழக ஆந்திரா எல்லை வனப்பகுதியில்  தமிழகம் மற்றும் ஆந்திரா என இரு மாநில போலீசார் இணைந்து 37 பேர் கொண்ட குழு அதிரடி மது விலக்கு சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, தேவராஜபுரம் மலையில் கள்ள சாராயம் காய்ச்ச தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 4000 லிட்டர் கள்ள சாராய ஊறல்கள், 240  லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் கள்ள சாராயம் காய்ச்ச பயன்படுத்தபடும் மூலப்  பொருட்கள்  ஆகியவை கண்டறியப்பட்டன. இதில் கண்டறிப்பட்ட ஊறல் மற்றும் பொருட்கள் அங்கேயே அழிக்கப்பட்டன. தொடர்ந்து  இப்பகுதியில் கள்ள சாராயம் காய்ச்சும் குற்றவாளிகளை கண்டறிந்து முற்றிலும் கள்ள சாராயம் இல்லாத மாவட்டமாக மாற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பல்வேறு தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.

இதையும் படிக்க:காயமடைந்த பாகுபலி; சிகிச்சையளிக்க ஏற்பாடுகள் தீவிரம்!