ஆசிரமத்தில் சிபிசிஐடி விசாரணையில் மாட்டிய முக்கிய ஆவணங்கள்...!

ஆசிரமத்தில் சிபிசிஐடி விசாரணையில் மாட்டிய முக்கிய ஆவணங்கள்...!

விக்கிரவாண்டி அருகே உள்ள அன்பு ஜோதி ஆ சிரமத்தில் நடைபெற்ற சி.பி. சி.ஐ.டி. சோதனையில் முக்கிய ஆவணங்கள் மற்றும் சவுக்கு கட்டை, ரத்த கரை படிந்த பாய் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன. 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே குண்டலபுலியூரில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக அன்பு ஜோதி ஆ சிரமம் செயல்பட்டு வருகிறது. இங்கு பராமரிக்கப்பட்டு வந்த சத்தியமங்கலத்தைச் சேர்ந்த ஜாபருல்லா என்பவர் காணாமல் போனதாக அவரது உறவினர் புகார் தெரிவித்த நிலையில், கடந்த 10-ம் தேதி போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. 

அதில், அனுமதியின்றி ஆ சிரமம் நடைபெற்று வந்ததும், இங்குள்ள மனநலம் பாதிக்கப்பட்டோர், ஆதரவற்றோர், மாற்றுத் திறனாளிகள் அடித்து துன்புறுத்தியதும், பெண்களுக்கு பாலியல் தொல்லை நடந்ததும் தெரியவந்தது. மேலும், 20 க்கும் மேற்பட்டோர் மாயமாகி இருந்ததும் தெரியவந்தது. 

இதையும் படிக்க : சிரமத்தில் பெண்களுக்கு பாலியல் தொல்லை...CBCID விசாரணை தொடக்கம்...!

இதனையடுத்து ஆ சிரம நிர்வாகி அன்பு ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா ஜூபின் உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சி.பி. சி.ஐ.டி.  போலீசாருக்கு மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி, இன்று சி.பி. சி.ஐ.டி. எஸ்.பி. அருண் பாலகுமாரன் தலைமையில் சி.பி. சி.ஐ.டி. போலீசார் ஆ சிரமத்தில் சோதனை மேற்கொண்டபோது, பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.

மேலும் மனநலம் பாதித்தோரை அடிக்க பயன்படுத்திய சவுக்கு கட்டை, ரத்தக்கறை படிந்த பாய் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளதாக  எஸ்.பி. அருண் பாலகுமாரன் தெரிவித்தார்.