தீபாவளி பண்டு சீட்டு மோசடி... 10 கோடி ரூபாய் போனதாக தகவல்...

தீபாவளி பண்டு சீட்டு நடத்தி சுமார் 10 கோடி ரூபாய்  மோசடி செய்த  நிறுவனத்தின் மேலாளர் உட்பட 2 பேரை போலிசார் கைது செய்தனர்.

தீபாவளி பண்டு சீட்டு மோசடி... 10 கோடி ரூபாய் போனதாக தகவல்...

திருவள்ளூர்: மாலந்தூர் கிராமத்தை சேர்ந்தவர்  ஜோதி என்பவர் மாதம் ஆயிரம் ரூபாய் செலுத்தினால் தீபாவளியில்   4 கிராம் தங்கம்,  40 கிராம் வெள்ளி நாணயம்,  பட்டாசு மற்றும் மளிகைப் பொருட்கள் தருவதாக கூறி சுமார் 15 ஆயிரம் வாடிக்கையாளர்களிடம் ரூபாய் 10 கோடிக்கு மேல்  வசூலித்த்தாக கதிருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட முகவர்களை நியமித்து தீபாவளி பண்டு சீட்டுக்கு பணத்தை வசூலித்தார்.

தீபாவளி நெருங்கியும் பணம் கட்டியவர்களுக்கு உரிய பொருட்கள் வழங்காமல் இருந்துள்ளார். இதுபற்றி பணம் கட்டியவர்கள் சென்று கேட்டபோது சில நாட்களில் பொருட்கள் தருகிறேன் என்று தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ஜே.பி.ஸ்டார் ஏஜென்சி கடைகள் அனைத்தையும் மூடிவிட்டு உரிமையாளர் ஜோதி தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும் படிக்க | சஷ்டியை முன்னிட்டு குவியும் ஏராளமான பக்தர்கள்...

இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் சாலை மறியல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முற்றுகை என பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தினர். இதனால், மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் ஜேபி ஜோதி மற்றும் அவரது மனைவி சரண்யா உட்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து தலை மறைவான குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

தற்போது ஜே.பி ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் மேலாளர்கள் பெருங்குடி வாக்கம் பகுதியைச் சேர்ந்த சரண்ராஜ்(29) மெய்யூர் பகுதியைச் சேர்ந்த வேணுகோபால் ஆகிய இருவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும் தாமரைப்பாக்கம் கூட்டு சாலையில் இயங்கி வரும் ஜே பி ஸ்டோர் ஏஜென்சி அலுவலகத்தில் குற்றப்பிரிவு காவல் துறையினர் சோதனை நடத்தினர்.

மேலும் படிக்க | தீபாவளி பண்டிகையை ஒட்டி கோயில்களில் சிறப்பு வழிபாடு....

அதில், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு வழக்கின் முக்கிய குற்றவாளி ஜோதி மற்றும் அவரது மனைவி சரண்யா ஆகியவர்களது பெயரில் உள்ள வங்கி கணக்குகளையும் அவர்களது பெயரில் உள்ள சொத்துக்களையும் மற்றும் பினாமி பெயர்களில் உள்ள சொத்துக்களையும் முடக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

--- பூஜா ராமகிருஷ்ணன்

மேலும் படிக்க | இலங்கை பொருளாதார நெருக்கடி...எளிமையான முறையில் தீபாவளி கொண்டாட்டம்!