"டாக்டர் சீட்டு போச்சா இப்படியா ஏமாறுவீங்க!!!" தாய் மற்றும் மகள் செய்த கூட்டு சதி...

"டாக்டர் சீட்டு போச்சா இப்படியா ஏமாறுவீங்க!!!" தாய் மற்றும் மகள் செய்த கூட்டு சதி...

மருத்துவ படிப்பிற்கு சீட் வாங்கி தருவதாக கூறி பல கோடி ரூபாய் ஏமாற்றிய தாய் மற்றும் மகளை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

பல கோடி மோசடி ; காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு :

சென்னை : வளசரவாக்கம் பகுதியை சேர்ந்தவர் சசிகலா(63),அவரது மகள் ரம்யா (34) பல நபர்களிடம் எம்பிபிஎஸ் மற்றும் எம்எஸ் போன்ற மருத்துவ படிப்புக்கு சீட் வாங்கித் தருவதாக கூறி பல நபர்களை ஏமாற்றியுள்ளனர். இந்நிலையில் ஜோசப் இளங்கோ என்பவருடைய மகளுக்கு செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியில் எம் எஸ் படிப்பிற்கு அட்மிஷன் வாங்கி தருவதாக கூறி சசிகலா மற்றும் அவருடைய மகள் ரம்யா ஆசை வார்த்தை கூறி ரொக்கமாகவும், காசோலை ஆகவும் சிறுக சிறுக 90 லட்சம் வரை வாங்கி உள்ளனர். ஆனால் இதுவரை மருத்துவ படிப்பிற்கான சீட் வாங்கித் தரவில்லை.இது தொடர்பாக ஜோசப் இளங்கோ காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்திருந்தார். இதைத்தொடர்ந்து ,சுந்தர் என்பவருடைய மகனுக்கு மருத்துவப் படிப்பு சீட்டான எம் பி பி எஸ் சீட் வாங்கி தருவதாக கூறி 28 லட்சம் ரூபாய் பணத்தை ரொக்கமாக பெற்றுள்ளார்கள், அவருக்கும் இதேபோன்று சீட் வாங்கி தராமல் தாயும் மகளும் ஏமாற்றியுள்ளனர். இது தொடர்பாக இவரும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்திருந்தார். 

மேலும் தெரிந்துகொள்ள :அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு உடனடி ஊதியம்...! பள்ளிக்கல்வித்துறை உத்தரவு....!

தாய் மற்றும் மகள் கைது ; நீதிமன்றத்தில் ஆஜர் :

இப்புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.அதன் பிறகு தாய் மற்றும் மகள் இரண்டு பேரும் போரூரில் இருப்பது போலீசாருக்கு தெரியவந்துள்ளது.குறிப்பாக இவர்கள் எத்தனை நபர்களை ஏமாற்றி இருக்கிறார்கள் என்பதும் தெரியவில்லை,மேலும் மருத்துவ படிப்பிற்கு சீட்டு வாங்கி தருவதாக கூறி பல கோடி ரூபாய் வரை ஏமாற்றியது விசாரணையில் தெரியவந்தது.இவர்கள் போரூர் பகுதியில் தலைமறைவாக இருப்பதாக  போலீசாருக்கு தகவல் கிடைத்தது.உடனடியாக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ரேவதி தலைமையிலான தனிப்படை போலீசார் போரூர் பகுதிக்கு சென்று இரண்டு நபர்களையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.