அமைச்சர் பொன்முடி வீட்டில் ரெய்டு; பாரின்சிக் ஆடிட் நடத்தும் அமலாக்கத்துறை!

அமைச்சர் பொன்முடி வீட்டில் ரெய்டு; பாரின்சிக் ஆடிட் நடத்தும் அமலாக்கத்துறை!

அமைச்சர் பொன்முடி வீட்டில் உள்ள கணினிகளில் பாரின்சிக் ஆடிட் நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்று காலை முதல் அமைச்சர் பொன்முடி மற்றும் அவருக்கு தொடர்புடையவர்கள் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் சோதனையின் போது பாரன்சிக் ஆடிட் எனப்படும் தொழில்நுட்ப ரீதியாக லேப்டாப், செல்போன், ஹார்ட் டிஸ்க், பெண் டிரைவ் போன்ற எலக்ட்ரானிக் உபகரணங்களில் வழக்குக்கு தேவையான ஆவணங்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கின்றதா அல்லது அழிக்கப்பட்டுள்ளதா என கண்டறிந்து வருவதாக கூறப்படுகிறது.

வருமானவரித்துறை, அமலாக்கத்துறை ஆகியோர் பாரன்சிக் ஆடிட்டை சோதனை நடத்திய பிறகு பறிமுதல் செய்யப்பட்ட எலக்ட்ரானிக் உபகரணங்களில் மேற்கொள்வர். இதன் மூலம் தொழில்நுட்ப ரீதியாக மறைத்து வைக்கப்பட்டுள்ள ,வரவு செலவு ஆவணங்கள், ரசிதுகள் சொத்து ஆவணங்கள் கண்டறிய பயன்படுகிறது. அமைச்சர் பொன்முடி வீட்டில் உள்ள கணினிகளில் வெளிநாட்டு பரிவர்த்தனைகள், முதலீடுகள், க்ரிப்டோ கரன்சி முதலீடுகளாக மேற்கொள்ளப்பட்டு அது தொடர்பான கோப்புகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமல்லாது பல நிறுவனங்கள் சமீப காலமாக தனியாக மென்பொருள் ஒன்றை உருவாக்கி அதில் வருமான வரித்துறை அமலாக்கத்துறை சோதனை மேற்கொள்ளும் போது கண்டுபிடிக்க முடியாத வகையில் பணி கணக்குகளை வைத்து வருகிறார்கள் எனவும் செய்திகள் வருகின்றன. கணக்கில் காட்டாத வருமானம் மற்றும் சொத்து ஆவணங்கள் பரிவர்த்தனைகளை ரகசியமாக வைத்துக் கொள்ள ஏதேனும் தனி சாப்ட்வேர்கள் பயன்படுத்தப்பட்டு அதில் மறைத்து வைக்கப்பட்டுள்ளனவா? என்ற அடிப்படையிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிக்க:பார்ம் டி, நர்சிங் பட்டப் படிப்பு; இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!