பென்சில் விற்பதாக சென்று பள்ளி மாணவிகளிடம் லீலை... சேட்டையை கண்டு வேட்டையாடிய பொதுமக்கள்...

ஆந்திராவில் சமூக ஆர்வலர் என்ற போர்வையில் பள்ளி மாணவிகளிடம் பாலியல் தொல்லை கொடுத்து வந்த நபரை பொதுமக்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

பென்சில் விற்பதாக சென்று பள்ளி மாணவிகளிடம் லீலை... சேட்டையை கண்டு வேட்டையாடிய பொதுமக்கள்...

ஆந்திர மாநிலம் காஜூவாக்க பகுதியில் உள்ள பிரகாஷ் நகர் பகுதியை சேர்ந்தவர் ரவுடி தோமன் சின்னா ராவ். போலீசாரின் ரவுடிகள் பட்டியலில் இடம் பிடித்துள்ள தோமன் சின்னாராவ் தன்னை நல்லவன் என்று காண்பித்து கொள்வதற்காக என்ஜிஓ அமைப்பு ஒன்றை துவக்கி சமூக சேவையில் ஈடுபடுவது போல் நடித்து வந்துள்ளார்.

இந்தநிலையில் நேற்று காலை அங்கு உள்ள பள்ளிக்கு சென்ற தோமன் சின்னாராவ் தலைமை ஆசிரியரிடம் பேசி பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு பென்சில், ரப்பர் ஆகியவற்றை கொடுத்துள்ளார்.

பின்னர் மீதி இருந்த பென்சில், ரப்பர் ஆகிவற்றை வீட்டுக்கு எடுத்து சென்ற தோமன் சின்னாராவ், அப்பள்ளியில் பயின்றுவரும்  சில மாணவிகளிடம் வீட்டுக்கு வந்தால் பென்சில், பேனா, ரப்பர் கொடுக்கிறேன் என்று கூறி அவர்களை மாலை வேளையில் வீட்டுக்கு வரவழைத்து, அவர்களிடம் பாலியல் ரீதியிலான சேட்டைகளை செய்துள்ளார்.

இதையறிந்து ஆவேசமடைந்த சிறுமிகளின் பெற்றோர், தோமன் சின்னாராவை தரதரவென இழுத்து வந்து தர்ம அடி கொடுத்தனர். தகவலறிந்து வந்த போலீசார், மக்களின் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தோமன் சின்னாராவை கைது செய்து, போக்கோ சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.