பண்ருட்டியில் போலி டி.எஸ்.பி. அதிரடி கைது... ஊர்க்காவல் படையில் வேலை வாங்கி தருவதாக மோசடி...

பண்ருட்டியில் ஊர்க்காவல் படையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த போலி டிஎஸ்பி கைது.

பண்ருட்டியில் போலி டி.எஸ்.பி. அதிரடி கைது... ஊர்க்காவல் படையில் வேலை வாங்கி தருவதாக மோசடி...

கடலூர் மாவட்டம், ரெட்டிச்சாவடி காவல் நிலையத்துக்கு உட்பட்ட பெரிய காட்டு பாளையம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கோபிகேராமன் என்பவருடைய மகன் கௌதம் வயது 22 இவர் பொறியியல் பட்டதாரி இளைஞர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பண்ருட்டி மற்றும் பல இடங்களில் டிஎஸ்பி என்றும் ஊர்க்காவல் படை துறையில் உயரிய பதவியில் உள்ள அதிகாரி என்று கூறி பல பேரிடம் போலீசில் வேலை வாங்கி தருவதாக சொல்லி பணம் வசூல் செய்து ஏமாற்றி விட்டதாக பண்ருட்டி அடுத்த கீழ் கவரப்பட்டு ஊரைச் சேர்ந்த ஸ்ரீநாத் தீர்த்தமலை ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் டிஎஸ்பி சபியுல்லா தலைமையில்  பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடிவந்த நிலையில் தற்பொழுது கௌதமை கைது செய்து விசாரணை செய்தனர் விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது.

கௌதம் பல இடங்களில் தான் காவல் துணை கண்காணிப்பாளர் என்று கூறி பண மோசடி செய்ததாகவும் மேலும்  போலீசில் வேலை வாங்கி தருவதாக சொல்லி பல பலரிடம் பல லட்சம் பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றி வந்ததாகவும்,  அதற்காக போலீஸ் சீருடை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் பெயரில் பணி ஆணை கடிதம் போன்றவை பயன்படுத்தியது தெரியவந்துள்ளது மேலும் பணி ஆணை கடிதம் அச்சிட்ட கம்ப்யூட்டர் ரூபாய் 10 ஆயிரம் பணம் ஆகியவை பறிமுதல் செய்து கௌதமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். போலீஸ் வேலைக்கு கூட உடல் அமைப்பு இல்லாத வாலிபர் தான் டிஎஸ்பி என்று ஏமாற்றிய சம்பவம் பண்ருட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.