போலி விளம்பரம் செய்து செல்போன், நகை பறிப்பு... கைதானவரிடம் தீவிர விசாரணை...

சென்னையில், போலி விளம்பரம் செய்து, செல்போன் மற்றும் நகை பறிப்பில் ஈடுபட்டு வந்தவரை போலீசார் கைது செய்தனர்.

போலி விளம்பரம் செய்து செல்போன், நகை பறிப்பு... கைதானவரிடம் தீவிர விசாரணை...

சென்னையில் மசாஜ் மற்றும் வீட்டு வேலைக்கு பெண்கள் தேவை என்று OLX செயலில் விளம்பரம் செய்யப்பட்டு அதில் தொடர்பு கொள்ளும் பெண்களை நேரில் வரவழைத்து செல்போன் மற்றும் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

சென்னையில் OLX செயலியில் மசாஜ் மற்றும் வீட்டு வேலைக்கு பெண்கள் தேவை என்ற விளம்பரம் கொடுத்து, பெண்களை ஐஸ்ஹவுஸ் பகுதிக்கு வரவழைத்து அவர்களது நகைகளை பறித்து விட்டு ஏமாற்றுவதாக தொடர் புகார்கள் வந்தன. இதுதொடர்பாக போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர்.

OLX மூலமாக விலை உயர்ந்த செல்போன்களை விற்பனை செய்வதாக கூறி ஒருவரை ஏமாற்றி கொண்டிருந்த ஹரி பிரசாத் என்பவரை கையும் களவுமாக போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 7 சவரன் நகை, செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார்,  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.