பிரீமியம் தொகைக்கு போலி ரசீது; ரூ. 2.5 கோடி மோசடி செய்த எல்.ஐ.சி ஏஜெண்ட் கைது!

பிரீமியம் தொகைக்கு போலி ரசீது; ரூ. 2.5 கோடி மோசடி செய்த எல்.ஐ.சி ஏஜெண்ட் கைது!

LIC வாடிக்கையாளர்களிடம் இருந்து எல்.ஐ.சி பிரிமியம் செலுத்துவதாக கூறி ரூ.2.54 கோடி பெற்றுக் கொண்டு ஏமாற்றிய முன்னாள் எல்.ஜ.சி ஏஜென்ட்டை மத்திய குற்றப்பிரிவு போலிசார் கைது செய்துள்ளனர்

சென்னை தியாகராயநகர், சாம்பசிவம் தெருவில் வசித்துவருபவர் சண்முகசுந்தரம் என்பவரின் மகன்  மனோகரன். இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.

அதில் சென்னை வேளச்சேரியில் எல்.ஐ.சி ஏஜென்டாக இருக்கும் ரவீந்தரன் என்பவரிடம் கடந்த 2013ம் ஆண்டு முதல் எல்.ஐ.சி பாலீசி எடுத்து பிரீமியம் தொகையை எல்.ஐ.சியில் செலுத்தி வந்ததாகவும், கடந்த 2020ம் ஆண்டு கொரோனா காலக்கட்டதில், ரவீந்தரன் தன்னிடம் எல்.ஐ.சி பிரீமியம் தொகையை தனது வங்கி கணக்கில் செலுத்தினால் நானே எல்.ஐ. சி-யில் செலுத்திவிடுவேன் என்று கூறியுள்ளார். 

இதனை நம்பிய மனோகரன் பிரீமியம்  தொகை மற்றும் எல்.ஐ.சி-யில் பெற்ற கடன் தொகைக்கான வட்டி ஆகியவற்றை ரவீந்தரின் வங்கி கணக்கிற்கு அனுப்பியதாகவும், பணத்தை பெற்றுக் கொண்டு எல்.ஐ.சிக்கு பணத்தை செலுத்தாமல் செலுத்தியது போல் போலியான எல்.ஐ.சி ரசீது தயார் செய்து கொடுத்துள்ளதாகவும் மேலும் தனது கையெழுத்தை போலியாகயிட்டு  எல்.ஜ.சிக்கு கொடுத்து தனது முகவரியை மாற்றி மோசடி செய்து ரூ.2,54,83,978/-யை ஏமாற்றிய பணத்தை மீட்டு தர வேண்டும் எனவும் புகாரில் தெரிவித்து இருந்தார்.

இதனை வழக்குப்பதிவு செய்து மத்திய குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் பாரதி விசாரணை மேற்கொண்டு  தலைமறைவாக இருந்த ரவீந்திரனை(50) கைது செய்தார். அவரிடமிருந்த  3 மடிக்கணிணிகள், செல்போன், முகவருக்கான அடையாள அட்டை மற்றும் போலி ரசீதுகள் ஆகியவற்றை கைப்பற்றினார்கள். 

இதனையடுத்து கைது செய்யப்பட்ட ரவீந்திரன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையும் படிக்க:மண்ணால் மூடப்பட்ட, 20,000 ஆண்டுகள் பழமையான 4 குகைகள் கண்டுபிடிப்பு!