விமானத்துறையில் வேலை வாங்கித்தருவதாக நூதன முறையில் மோசடி... மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு...

நாகை அருகே விமானத்துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, அறநிலையத்துறை ஊழியரிடம் நூதன முறையில் மோசடி ஆசாமிக்கு போலீஸ் வலைவீச்சு.

விமானத்துறையில் வேலை வாங்கித்தருவதாக நூதன முறையில் மோசடி...  மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு...

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே பிரதாபராமபுரத்தை சேர்ந்த புருஷோத்தமன் என்பவரது மகன் வெங்கட்ராஜ் (வயது 23). இவர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அறநிலையத்துறை அலுவலகத்தில் தட்டச்சராக வேலை பார்த்து வருகிறார். 

இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் 4-ந் தேதியன்று வெங்கட்ராஜ் செல்போன் என்னை தொடர்பு கொண்ட ஒருவர், தான் விமானத்துறையில் வேலை பார்ப்பதாகவும், விமானத்துறையில் பயணச்சீட்டு ஆய்வாளர் பணி வாங்கித் தருவதாகவும் கூறியுள்ளார். இதற்காக அந்த நபர் வெங்கட்ராஜிடம் ரூ.19,600 கேட்டுள்ளார். இதனை நம்பிய வெங்கட்ராஜ் கேட்ட பணத்தை ஆன்லைன் (பே.டி.எம்) மூலம் அந்த நபருக்கு அனுப்பியுள்ளார்.

இந்த நிலையில் வேலை தொடர்பாக  வெங்கட்ராஜ் மீண்டும் அந்த நபருக்கு தொடர்பு கொண்ட போது, அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதில் அதிர்ச்சி அடைந்த வெங்கட்ராஜ் இதுகுறித்து நாகை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் மகேஷ் வழக்குப்பதிவு செய்து வெங்கட்ராஜிடன் விமான துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி நூதன முறையில் பணத்தை மோசடி செய்த மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.