டிக்டாக் செய்வதற்காக குற்றவாளியோடு இரவில் பேருந்தில் தங்கிய சிறுமி…    

டிக்டாக் செய்வதற்காக குற்றவாளியோடு இரவில் பேருந்தில் தங்கிய சிறுமி…      

சென்னை புரசைவாக்கம் தாண்டவன் தெருவைச் சேர்ந்தவர் கோட்டீஸ்வரன். அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனி ஏ பிளாக்கில் உள்ள தனியார் பள்ளியில் காவலாளியாக வேலை செய்து வருகிறார். நேற்று பள்ளி வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பள்ளி பேருந்தை எடுக்கும் பொழுது உள்ளே  நான்கு நபர்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து அவர்களை பிடித்த பொழுது மூன்று பேர் தப்பி விட ஒருவரை மட்டும் மடக்கிப்பிடித்து அரும்பாக்கம் போலீஸ் நிலையத்தில் கொண்டு சென்று ஒப்படைத்தார்.

போலீசார் விசாரணையில் பிடிபட்ட நபர் ஆண் அல்ல என்பதும் பெண் என்பதும் ஆண் போல முடி வெட்டிக்கொண்டு ஆண்கள் போன்று சீருடை அணிந்து இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அந்த சிறுமியிடம் விசாரித்தபோது சென்னை ஜாம்பஜார் மீர்சாகிப்பேட்டையைச் சேர்ந்த 16 வயது சிறுமி என்பதும் அங்குள்ள சாலையோரத்தில் தங்கி வருவதாகவும் தனது நண்பர்களான கார்த்திக், நிஜாம் மற்றும் தேவா ஆகியோர்களுடன் டிக் டாக் செய்வதற்காக இரவு நேரத்தில் ஈசிஆர் சென்று விட்டு திரும்பி வரும் பொழுது பள்ளியின் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து உள்ளே நிறுத்தி இருந்த பள்ளிக்கு சொந்தமான பஸ்ஸில் டிக் டாக் செய்து விட்டு தூங்கி விட்டதாகவும் காவலாளி வந்து பார்க்கும் போது தன்னுடன் இருந்த மூன்று நண்பர்களும் ஓடி விட்டதாகவும் தான் மட்டும் சிக்கிக் கொண்டதாகவும் சிறுமி கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.  

இதையடுத்து அந்த சிறுமியிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவருக்கு சொந்த ஊர் திருச்சி. தந்தையும் , தாயும் பிரிந்து விட்டதால் தந்தையுடன் தங்கியிருப்பதும், இந்த சிறுமி ஆண்களாக தங்களை நினைத்து கொண்டு தோற்றத்திலும், பழக்கவழக்கங்களில் தங்களை மாற்றி கொண்டு வாழும் டாம் கேர்ள் போன்று சுற்றி வந்ததாகவும் அதற்காக சிகையலங்கராம் உடை ஆகியவற்றை மாற்றி கொண்டுள்ளதும் தெரியவந்துள்ளது. சென்னையில் ஆண் நண்பர்களுடனே சுற்றி கொண்டிருந்தாக கூறப்படுகிறது. ராயப்பேட்டை பகுதியில் மீர்சாகிப் பேட்டை பகுதியில் சாலையோரமாக சிறுமி வசித்து வந்து அங்குள்ள சிலருடன் பழக்கம் ஏற்பட்டு கஞ்சாபோதைக்கு அடிமையாகி இருந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் தான் மீர்சாகிப் பேட்டை பகுதியைச் சேர்ந்த 3 ஆண் நண்பர்களுடன் அடிக்கடி சுற்றி வந்து கஞ்சா புகைத்து வந்ததும், ஆனால் ஆண் போலவே சிறுமி இருப்பதால் யாருக்கும் சந்தேகம் வரவில்லை என கூறப்படுகிறது. 3 ஆண் நண்பர்களுடன் சேர்ந்து டிக்டாக் செய்து வந்ததாகவும் தெரிகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சிறுமி அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக், நிஜாம், தேவா ஆகியோருடன் சேர்ந்து பைக்கில் சுற்றி உள்ளனர். பிறகு விருகம்பாக்கம் பகுதியில் இரவு வாகனசோதனையின் போது விருகம்பாக்கம் போலீசாரிடம் சிக்கி கொண்டனர். விருகம்பாக்கம் போலீசார் நடத்திய விசாரணையில் பிடிபட்ட தேவா மீது குற்ற வழக்கு இருப்பது தெரிந்தது. நிபந்தனை ஜாமினில் சில நாட்களுக்கு முன்பு தான் வெளியே வந்து காவல்நிலையத்தில் கையெழுத்திட்டு வந்துள்ளார். இதையடுத்து போலீசாருக்கு அப்போது அந்த 3 பேருடன் இருப்பது சிறுமி என தெரியவில்லை. 

அவர்களிடமிருந்த செல்போன் மற்றும் இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்து மறுநாள் காலை வரும்படி அனுப்பி வைத்தனர். இதையடுத்து சிறுமியும் 3 பேரும் நடந்து அரும்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியின் சுவர் ஏறி குதித்து பள்ளியின் பேருந்துக்குள் கஞ்சா போதையிலே தூங்கிஉள்ளனர். நேற்று காலை காவலாளி பார்த்ததும் பேருந்திலேயே அரும்பாக்கம் காவல் நிலையத்திற்கு 4 பேரையும் கொண்டு சென்றார். அப்போது காவலாளியை தாக்கி விட்டு 3 பேர் தப்பி ஓடி விட்டனர். சிறுமி சிக்கி கொண்டார். அப்போது கூட அது சிறுமி என காவலாளிக்கு தெரியவில்லை. அரும்பாக்கம் போலீசார் விசாரணை நடத்திய போது தான் அது ஆண் அல்ல பெண் என்பது தெரிந்தது. காவல்துறைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிறுமிக்கு பாலியல் தொல்லை எதுவும் தரப்படவில்லை என்பதனை உறுதிப்படுத்திய பிறகு அரும்பாக்கம் போலீசார் திருச்சியில் உள்ள அவரது தந்தையை வரவழைத்து விசாரணை நடத்தினர். பிறகு மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் மூலம் சிறுமியை தந்தையிடம் ஒப்படைத்து போலீசார் திருச்சி அனுப்பி வைத்தனர். தப்பி ஓடிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.