இங்கையும் ஆரம்பிச்சிட்டாங்க.. ரயில் நிலையத்தில் "3 கோடி" மதிப்புடைய தங்க நகைகள் பறிமுதல் - ரயில்வே அதிகாரிகள் அதிரடி

திருச்சி ரயில் நிலையத்தில் உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட 3 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இங்கையும் ஆரம்பிச்சிட்டாங்க.. ரயில் நிலையத்தில் "3 கோடி" மதிப்புடைய தங்க நகைகள் பறிமுதல் - ரயில்வே அதிகாரிகள் அதிரடி

காரைக்காலில் இருந்து எர்ணாகுளம் செல்லும் விரைவு ரயிலானது திருச்சிராப்பள்ளி ரயில் நிலையத்திற்கு இன்று இரவு 7.40 மணிக்கு முதலாவது பிளாட்பார்மில் வந்தது, அப்போது ரயிலில் பயணிகளின் உடமைகளை குற்றத் தடுப்புப் பிரிவு போலீசார் வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது 2 வட மாநிலத்தவர் மற்றும் திருச்சியை சேர்ந்த ஒருவரின் உடைமைகளை சோதனையிட்டதில் வளையல், நெக்லஸ், ஆரம், மாலை, நெத்திச்சுட்டி உள்ளிட்ட 6.8 கிலோ எடையுள்ள தங்க நகைகள் கொண்ட வந்தது தெரியவந்து.  இந்த ஆவணங்களை கொண்டு செல்ல அவர்களிடம் உரிய ஆவணம் இல்லாத காரணத்தினால் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் அதனை பறிமுதல் செய்தனர். அதுமட்டுமில்லாமல் திருச்சி ரயில் நிலையத்தில் முதன் முதலாக மூன்று கோடி ரூபாய் மதிப்புடைய தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.