நடத்தையில் சந்தேகம்... மனைவியை கொன்று ஆற்றில் வீசிய கணவன்...

காதல் திருமணம் செய்த மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொன்று கணவனே ஆற்றில் வீசியுள்ளார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடத்தையில் சந்தேகம்... மனைவியை கொன்று ஆற்றில் வீசிய கணவன்...

திருநெல்வேலி: நாங்குநேரி அருகே உள்ள மைலாப்புதூர் மேலூரைச் சேர்ந்தவர் சுடலைக்கண்ணு. மதுரையில் கார் டிரைவராக வேலை பார்த்து வந்த இவரும், ஈஸ்வரி என்ற பெண்ணும் சில வருடங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 

மதுரையில் தங்கியிருந்த போதே, சுடலைக்கண்ணுவுக்கும், ஈஸ்வரிக்கும் இடையே பிரச்சினை வெடிக்கத் தொடங்கி இருக்கிறது. வீண் வாக்குவாதங்களால் நிலைகுலைந்து போன இந்த ஜோடி, இடத்தை மாற்றினால் பிரச்சினைகள் குறையும் என நினைத்தனர்.

மேலும் படிக்க | கணவன் உடலை மீட்டு தர மனைவி கண்ணீருடன் கோரிக்கை..!

அதன்படி, சில நாட்களுக்கு முன்புதான் மதுரையில் இருந்து கிளம்பி நாங்குநேரியில் உள்ள துலுக்கர்பட்டியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி வந்தனர். ஆனால் அப்போதும் கணவன் மனைவிக்குள் வாழ்க்கை இன்பமாக செல்வதைக் காட்டிலும், இடியும் மின்னலுமாய் கழிந்தது. 

சிறு சிறு பிரச்சினைகளையும் இருவருமே பெரிதுபடுத்த, அதனால் சச்சரவுகளும், வீண் வாக்குவாதமும் பெருகியது. கூடவே, சுடலைக்கண்ணுவுக்குள் ஈஸ்வரியின் மீது சந்தேகத்தீயும் வேர் விட்டு எரிய ஆரம்பித்தது. ஈஸ்வரியின் நடத்தையில் சந்தேகம் எழுந்ததால் தொடர்ந்து சுடலைக்கண்ணுவின் புத்தி சஞ்சலத்துக்கு உள்ளானது.  

மேலும் படிக்க | தற்கொலை செய்த விசாரணை கைதியின் உடல் குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டது...

கடந்த 16-ம் தேதியன்று வழக்கம் போல் கணவன் மனைவி இருவரும் வெளியே சென்றுள்ளனர். வழியிலேயே வாக்குவாதம் சண்டையாக உருவெடுத்தது. ஆத்திரம் தாளாத சுடலைக்கண்ணு ஈஸ்வரியின் கழுத்தை பிடித்து நெரித்துக் கொலை செய்தார்.

பின்னர் ஈஸ்வரியின் உடலை நம்பியாற்றின் கரையில் போட்டு விட்டு எதுவும் தெரியாதவாறு வீட்டுக்கு திரும்பினார். தன்னுடன் வந்த மனைவி திடீரென மாயமாகி விட்டார் என ஊராரை நம்ப வைத்து விட்டார் சுடலைக்கண்ணு. 

மேலும் படிக்க | மூன்றாவது மாடியில் இருந்து குதித்து விசாரணை கைதி தற்கொலை...!

இந்நிலையில் கடந்த 19-ந் தேதி பெண் சடலம் ஒன்று நம்பியாற்றின் கரையில் ஒதுங்கியதை பார்த்தவர்கள், போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடலைக் கைப்பற்றி விசாரித்த போது அது காணாமல் போனதாக கூறப்பட்ட ஈஸ்வரி என்பது தெரியவந்தது.

கணவர் சுடலைக்கண்ணுவை விசாரிக்க வேண்டிய விதத்தில் விசாரித்தபோது அவர் உண்மைகளை கக்கி உள்ளார். காதலிக்கும் போது இருக்கும் ஈர்ப்பு, கல்யாணத்திற்கு பிறகு காணாமல் போவதுதான் இத்தகைய துர்மரணங்களுக்கு காரணமாகிறது.

மேலும் படிக்க | “இப்படியே போனால், இளைஞர்களால் வாழ முடியாது” - மதுரை உயர்நீதிமன்றம்...