நூதன முறையில் நகை திருட்டு- மர்மநபர்களுக்கு வலைவீச்சு

கோபிசெட்டிபாளையம் அருகே கொரோனா நிதி தருவதாக கூறி ரூ. 2 லட்சம் மதிப்பிலான 5 பவுன் தங்க நகையை நூதன முறையில் திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

நூதன முறையில் நகை திருட்டு- மர்மநபர்களுக்கு வலைவீச்சு

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் அருகே உள்ள வேலுமணி நகரை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மனைவி சுந்தரி. கணவர் பொன்னுசாமி உயிரிழந்தநிலையில், சுந்தரி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வருவதாக கூறப்படுகிறது.  இதற்கிடையில் வயது முதிர்ந்தவரான சுந்தரியின் வீட்டிற்கு வந்த இரண்டு மர்மநபர்கள், சுந்தரியிடம் உங்களுக்கு கொரோனா நிதி 18 ஆயிரம் ரூபாய் வந்துள்ளதாகவும், அதை கொடுப்பதற்காக அதிகாரிகள் வந்து கொண்டிருப்பதாகவும், நகை அணிந்திருந்தால் நிவாரண தொகையை தர மாட்டார்கள் என்று கூறிய மர்மநபர்கள், நகையை கழற்றி வைத்துவிடுங்கள் என கூறியுள்ளனர்.

அவர்கள் சொன்னதை உண்மை என நம்பிய சுந்தரி, நகை முழுவதையும் கழற்று படுக்கை அறையில் உள்ள தலையனைக்கு அடியில் வைத்துள்ளார். இதனிடையே வீட்டிற்கு வந்த மர்மநபர்கள் சுந்தரியிடம் டீ டீ கிடைக்குமா என்று கேட்கவே, சுந்தரியும் டீ போடுவதற்காக சமையல் அறைக்குள் சென்றுள்ளார். அந்த சமயம் சுந்தரிக்கு தெரியாமல் அறைக்கு சென்ற மர்மநபர்கள் தலையணையின் கீழ் இருந்த 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகையை எடுத்துக்கொண்டு தப்பி சென்றனர்.

பின்னர் டீ போட்டு கொண்டு வந்து பார்த்த போது அந்த நபர் அங்கிருந்து மாயமாகி இருப்பது தெரிய வந்தது. இதனால் சந்தேகமடைந்த சுந்தரி நகை இருந்த அறையில் சென்று பார்த்துள்ளார். அங்கிருந்த நகைகள் முழுவதும் திருடு போனதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், இச்சம்பவம் குறித்து கோபிசெட்டிப்பாளையம், போலீசாருக்கு தகவல் அளித்தார். தகவலலின்பேரில் வந்த போலீசார், கொள்ளை சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.