பட்டப்பகலில் இருசக்கர வாகனத்தின் பெட்டியில் இருந்த நகைகள் திருட்டு!!

செங்கத்தில் பட்டப்பகலில் ஆள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் இரு சக்கர வாகனத்தின் பெட்டியில் வைத்திருந்த நான்கு லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பட்டப்பகலில் இருசக்கர வாகனத்தின் பெட்டியில் இருந்த நகைகள் திருட்டு!!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல் ராவந்தவாடி செட்டித்தாங்கல் கிராமத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி முருகன் என்பவர் கடந்த ஆறாம் தேதி செங்கம் ராஜவீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கியில் அடகு வைத்திருந்த சுமார் நான்கு லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகளை மீட்டு தனது இரு சக்கர வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள  பெட்டியில் வைத்துக் கொண்டு புறப்பட்டுள்ளார்.

செல்லும் வழியில் புதிய பேருந்து நிலையம் அருகே லட்சுமி பேக்கரியில் தின்பண்டங்க்ளை வாங்குவதற்காக இரு சக்கர வாகனத்தை கடையின் அருகே நிறுத்திவிட்டு மனைவியோடு கடைக்குள்ள சென்றுள்ளார்.

திண்பண்டங்களை வாங்கிக்கொண்டு இரு சக்கர வாகனத்தின் பெட்டியில் வைக்க முயன்ற போது தான் பெட்டியில் வைத்திருந்த நகைகள் திருடப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து செங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர்  பேக்கரியில் வைத்திருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது , அடையாளம் தெரியாத ஒரு இளைஞர் இருசக்க வாகனம் அருகே சென்று பெட்டியிலிருந்து நகையை எடுத்துக்கொண்டு மற்றொரு இளைஞரின் இருசக்கர வாகனத்தில் பின் இருக்கையில் அமர்ந்து சென்றது தெரியவந்தது.

ஆனால் இருசக்கர வாகனத்தின் பெட்டியின் பூட்டு உடைக்காமல் நூதன முறையில் பெட்டியை திறந்து நகை திருடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் காவல் துறையினர்  புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் நகையை பறிகொடுத்த முருகன் மற்றும் அவரது மனைவி பூஜ்ஜி அம்மாள் ஆகிய இருவரையும் நாள்தோறும் காவல் நிலையத்திற்கு வரவழைத்து, அலட்சியம் காட்டி வருவதாக  குற்றம் சாட்டுகிறார்கள்.