கலாஷேத்ரா வழக்கு... ஆன்லைனில் புகாரளிக்கலாம்!!

கலாஷேத்ரா வழக்கு... ஆன்லைனில் புகாரளிக்கலாம்!!

கலாஷேத்ரா கல்லூரியில் பாலியல் தொல்லை தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவிகள் ஆன்லைனில் புகாரளிக்கலாம் என விசாரணைக்குழு தெரிவித்துள்ளது. 

கலாஷேத்ரா கல்லூரி மாணவிகளுக்கு பேராசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.  இதனிடையே கலாஷேத்ரா கல்லூரியில் மாநில மனித உரிமைகள் ஆணையம் 2 நாட்களாக 30 மாணவர்களிடம் தனியாக விசாரணை மேற்கொண்டது.  இந்நிலையில் கலாஷேத்ரா அறக்கட்டளை சார்பில் அமைக்கப்பட்ட நீதியரசர் கண்ணன் தலைமையிலான 3 பேர் கொண்ட குழு மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. 

இதனிடையே பாதிக்கப்பட்ட மாணவிகள் வரும் 19 ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் புகார் அளிக்கலாம் எனவும், அவர்களது தகவல்கள் பாதுகாக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  புகார் தொடர்பான குறுஞ்செய்தி, மின்னஞ்சல், ஆவணங்கள் மற்றும் சிசிடிவி காட்சிகள் வரும் 25 ஆம் தேதி தனிப்பட்ட முறையில் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படுமென விசாரணைக்குழு தெரிவித்துள்ளது.  மேலும் சம்பந்தப்பட்ட பேராசிரியர்கள்  மீதான பாலியல் புகாரில் விரைவில் ஆரம்ப கட்ட விசாரணை தாக்கல் செய்யப்படும் எனவும் விசாரணைக்குழு தெரிவித்துள்ளது.  

இதையும் படிக்க:   அமலுக்கு வந்த மீன்பிடித் தடைக்காலம்...!!