கூடங்குளம் அணு உலை: 2 அடுக்கு பாதுகாப்பையும் மீறி, பல லட்சம் மதிப்பிலான காப்பர் திருட்டு!

கூடங்குளம் அணு உலை: 2 அடுக்கு பாதுகாப்பையும் மீறி, பல லட்சம் மதிப்பிலான காப்பர் திருட்டு!

நெல்லை மாவட்டம் கூடன்குளம் அணு மின் உலையில் 3மற்றும் 4வது அணுஉலை பணிக்காக வைத்திருந்த பல இலட்ச ரூபாய் மதிப்பிலான  காப்பர் கம்பிகள் திருடப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் கூடன்குளத்தில் மத்திய அரசுக்கு சொந்தமான அணுமின் நிலையம் இயங்கி வருகின்றது.
இங்கு ஒன்று மற்றும் இரண்டாவது அணு உலையில் தலா ஆயிரம் மெகாவாட் மின்சார உற்பத்தி செய்யப்பட்டு விகிதாச்சார முறையில் அனைத்து மாநிலங்களுக்கும் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. தற்போது 3 மற்றும் 4வதுஉலைக்கான பணிகள் சுமார் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளன. 5, 6 ஆகிய அணு உலைகளுக்கான பணிகள் பூர்வாங்க நிலையில் உள்ளன.

இந்நிலையில் அணுமின் நிலையத்தில் தனியார் ஒப்பந்த நிறுவனமான அவசர்லா டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிட்டெட் என்ற ஒப்பந்த நிறுவனம் கூடன்குளம் 3, 4வது அணுஉலை கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகிறது. இதில் கட்டுமான பணிகளுக்காக வைத்திருந்த பல இலட்ச ரூபாய் மதிப்பிலான காப்பர் கம்பிகள் திருட்டு  போனதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அதிர்ச்சி அடைந்த  அந்நிறுவன ஊழியர் ரஞ்சித் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கூடன்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

24 மணி நேரமும் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் பாதுகாப்புடன் இரண்டு அடுக்கு பாதுகாப்பு நிறைந்த பகுதியில் பல லட்சம் மதிப்பில் ஆன காப்பர் கம்பிகள் திருடு போனது அங்கிருக்கும்  தனியார் ஒப்பந்த நிறுவனங்கிடையேயும் ஒப்பந்த தொழிலாளர்கள் இடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிக்க:கொடநாடு வழக்கு: "விசாரிக்காத தமிழக அரசு" ஆர்பாட்டம் நடத்தும் ஓபிஎஸ்!