அரசு பணிக்கு எனக்கூறி நூதன முறையில் மணல் கொள்ளை!

திருப்பத்தூர் மாவட்டம்  ஆம்பூர் அருகே பாலாற்றில் அரசு பணிக்கு எனக்கூறி பொதுப்பணித்துறை அதிகாரிகளே நூதன முறையில் டிராக்டர்களில் மணல் கொள்ளையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மின்னூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் பாலாற்றில் வட்டாட்சியர் உத்தரவின் பேரில்  மழை காலங்களில் ஏரி,கால்வாய் மதகுகள் உடைப்பு ஏற்படுவதை சரிசெய்ய முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுப்பணித்துறை மூடைகளில் மணல் நிரப்பி எடுத்து செல்வது வழக்கம். 

ஆனால் இம்முறை வழக்கத்திற்கு மாறாக சாக்கு பைகளில் மணல் எடுத்து செல்லாமல் 5 டிராக்டர்களில் மணம் ஏற்றி சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்து காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டதை அறிந்த பொதுப்பணித்துறையினர் மறைமுகமாக மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய ட்ராக்டர்களை ஆங்காங்கே நிறுத்தி வைத்துள்ளனர்.

மேலும் வருவாய் துறை மற்றும் காவல்துறையினர் விசாரணை மேற்கொள்வதில் உஷாரான பொதுப்பணித்துறையினர் கணக்கு காண்பிப்பதற்காக ஆம்பூர் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் ஓரிரு டிரகட்ராகளில் மனல் கொண்டு வந்து இருப்பு வைத்துள்ளனர்.

திமுக சேர்மன் கேட்டதாக கூறி மறைமுகமாக டிராக்டர்களில் மணல் கடத்தல் நடைபெறுவதை மாவட்ட ஆட்சியர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.