மகளை காதலுடன் அனுப்ப மறுத்து போலீஸ் வேன் முன்பு படுத்து பெண்ணின் பெற்றோர் போராட்டம்!

நாமக்கல்லில் மகளின் காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பெண்ணின் பெற்றோர் காவல்துறை வாகனத்தின் முன்பு அழுது புரண்டு போராடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாமக்கல் மாவட்டம் தாண்டாகவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பச்சியப்பன். இவரது மகள் பவதாரணியும், அதே பகுதியை சேர்ந்த மணி என்பவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர். அவர்கள் மாவட்ட கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, இருவரும் திருமண வயதை அடைந்து விட்டதால், பெண்ணின் விருப்பப்படி கணவருடன் செல்லலாம் என நீதிபதி கூறினார்.

இதையடுத்து அவர்களை அழைத்துச்சென்ற காவல்துறை வாகனத்தின் முன்பு படுத்து, பவதாரணியின் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், காதல் ஜோடியை மற்றொரு வாகனத்தில் ஏற்றி, பாதுகாப்புடன் அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.