வடமாநில பெண் கூலித்தொழிலாளி கத்தியால் குத்திக்கொலை

கள்ளக்குறிச்சியில் சிமெண்ட் செங்கல் உற்பத்தி செய்யும் இடத்தில் வடமாநில பெண் கூலித்தொழிலாளி கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி அருகேயுள்ள சிறுவங்கூரில் புதியதாக கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அருகேயுள்ள சிமெண்ட் செங்கல் உற்பத்தி செய்யும் இடத்தில் கூலி வேலை செய்து வந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த மூர்த்தி தேஜூ என்ற பெண் மர்மமான முறையில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.  இது குறித்த தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி போலீசார் கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து சம்பவ இடத்தில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜவகர்லால் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து அங்கு பணிபுரிந்து வரும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த கேஷவ்நாயக் உள்ளிட்ட 5 வடமாநில தொழிலாளர்கள் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் கேசவ்நாயக் கொலை செய்தது‌ உறுதி செய்யப்பட்டது. கொலையாளியை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.