பிரேக் அடித்த ஆம்னி பேருந்து...நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்து...!

பிரேக் அடித்த ஆம்னி பேருந்து...நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்து...!

கள்ளக்குறிச்சியில் இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க பிரேக் அடித்த ஆம்னி பேருந்து நிலை தடுமாறி கண்காணிப்பு கேமரா கம்பத்தில் மோதியதில் விபத்து ஏற்பட்டது.

சென்னையிலிருந்து மதுரை நோக்கி சென்ற ஆம்னி பேருந்து ஒன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் ஆசனூர் அருகே சென்ற போது, இருசக்கர வாகனம் ஒன்று குறுக்கே வந்தது.

இதையும் படிக்க : ஈவிகேஎஸ் மட்டுமல்ல...நானும் தான் பெரியாரின் பேரன்...பரப்புரை செய்த கமல்!

இதனால் பதற்றமடைந்த ஆம்னி பேருந்து ஓட்டுநர்,  குறுக்கே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க பிரேக் அடித்துள்ளார். 

அப்போது கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பேருந்து, சாலையின் நடுவே உள்ள கண்காணிப்பு கேமரா கம்பத்தில் மோதியதில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.