தலைமறைவாக உள்ள குற்றவாளிகளின் புகைப்படம் வெளியீடு...தகவல் கொடுப்பவருக்கு தக்க சன்மானம் அறிவிப்பு!

தலைமறைவாக உள்ள குற்றவாளிகளின் புகைப்படம் வெளியீடு...தகவல் கொடுப்பவருக்கு தக்க சன்மானம் அறிவிப்பு!

ஆரூத்ரா கோல்டு டிரேடிங் வழக்கு தொடர்பாக தலைமறைவாக உள்ள குற்றவாளிகளின் புகைப்படத்தை, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்டுள்ளனர்.

சென்னை அமைந்தகரையைத் தலைமையிடமாகக் கொண்டு ஆருத்ரா கோல்டு டிரேடிங் என்ற நிறுவனம் செயல்பட்டு வந்தது. தமிழ்நாடு முழுவதும் உள்ள தங்களது கிளைகளில், முதலீடு செய்பவர்களுக்கு மாதம் தோறும் 10 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை வட்டி தருவதாகக் கூறி பொதுமக்களிடம் பண மோசடியில் ஈடுபட்டது. இது தொடர்பாக சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு பாதிக்கப்பட்ட ஏராளமானோர் புகார் அளித்துள்ளனர்.

இதையும் படிக்க : திருச்சி மிகப்பெரிய மையமாக மாறும் - அமைச்சர் கே. என்.நேரு!

இதையடுத்து பெருமளவில் நிதிகளை பெற்று மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாக உள்ள குற்றவாளிகளின் புகைப்படத்தை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்டுள்ளனர். மேலும் இவர்களைப் பற்றி தகவல் கொடுப்பவருக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் எனவும், தகவல் கொடுப்பவரின் முகவரிகள் ரகசியமாக வைக்கப்படும் எனவும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது வரை இந்த வழக்கில் நிறுவனத்தின் இயக்குனர்கள் மேலாளர்கள், ஏஜென்ட்கள் என 11 பேரை கைது செய்துள்ளனர்.