கள்ளக்காதலால்..... மதுவில் பங்கு கேட்டு இறப்பிலும் இணைப்பிரியாத நண்பர்கள்!!

கள்ளக்காதலால்..... மதுவில் பங்கு கேட்டு இறப்பிலும் இணைப்பிரியாத நண்பர்கள்!!

கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த கணவனை, மனைவியே விஷம் வைத்து கொலை செய்துள்ள சம்பவம் நடைந்தேறியுள்ளது.  

திருமணம்:

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள நடராஜபுரத்தைச் சேர்ந்தவர்கள் சுகுமார் - கவிதா தம்பதி.  38 வயதான சுகுமார் கோழி இறைச்சி கடையில் வேலை பார்த்து வந்த நிலையில் கவிதா அருகில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். 

கள்ளக்காதல்:

இந்நிலையில் அதே நிறுவனத்தில் வேலை பார்த்த மற்றொருவருக்கும் கவிதாவுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டதையடுத்து கணவன் - மனைவிக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.  கவிதாவின் கணவர் கள்ளக்காதலனை தனியே அழைத்து மிரட்டியதால் மனம் உடைந்து போயுள்ளார் கவிதா.

சந்தோஷத்திற்காக:

இதற்கு மேலும் கணவனை உயிருடன் விட்டால் தனது சந்தோஷம் நிலைக்காது என நினைத்தவர் கணவனைக் கொல்வதற்கான வழியை தேடியுள்ளார்.  இதை செயல்படுத்தும் விதமாக கணவரின் அண்ணனான மணி என்பவரை கடந்த சனிக்கிழமையன்று அழைத்து அவரிடம் 400 ரூபாய் கொடுத்து இரண்டு மதுபாட்டில்கள் வாங்கி வர கூறியுள்ளார்.

மதுப்பாட்டிலில்:

மணியும் வாங்கிக் கொடுக்கவே, ஒன்றை மணியிடமே வழங்கி விட்டு மற்றொன்றை கணவருக்காக வைத்துள்ளார்.  யாரும் பார்க்காத நேரத்தில் விஷத்தை ஊசி மூலமாக ஏற்றி அதனை மதுவில் கலந்துள்ளார் கவிதா.  விஷம் கலந்த மதுவை கணவன் சுகுமாருக்கு கொடுத்தபோதும், அதை குடிக்காமல் வைத்துள்ளார் சுகுமார்.

இரண்டு நாட்களுக்கு பிறகு:

இந்நிலையில் திங்கட்கிழமையன்று வேலைக்கு சென்ற சுகுமார், மதிய உணவு இடைவேளையில் மனைவி கொடுத்த மதுவை குடிப்பதற்கு தயாராகியுள்ளார்.  அப்போது அங்கு வந்த சுகுமாரின் நீண்டநாள் நண்பரான பீகாரைச் சேர்ந்த அரிலால் என்பவர் சுகுமார் மதுஅருந்துவதை கண்டுள்ளார்.

மதுவில் பங்கு:

நண்பர் அருந்தும் மதுவில் தனக்கும் பங்கு வேண்டும் என பிடிவாதம் பிடித்ததையடுத்து இருவரும் அதனை குடித்து முடித்துள்ளனர்.  இதையடுத்து சுகுமார் மற்றும் அரிலால் ஆகியோருக்கு தொண்டை கவ்வியதோடு, வயிற்றுப்போக்கும் ஏற்பட்டுள்ளது.

சிகிச்சை பலனின்றி:

உடனே அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதித்த போதும், சிகிச்சை பலனின்றி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.   இதுகுறித்து விசாரணை செய்த போலீசார், மணியின் புகாரின் பேரில் கவிதாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 

நண்பரும் இணைந்து:

கள்ளக்காதலைக் கண்டித்ததற்காக கட்டிய கணவனையே மனைவி கொலை செய்த கொடூர சம்பவம் நிகழ்ந்தாலும், இதில் எந்த நிலையிலும் சம்பந்தப்படாத நண்பர் உயிழந்ததுதான் வேதனை தரும்படியாக உள்ளது.

இதையும் படிக்க:  பிரபாகரன் குறித்த பழ நெடுமாறன் கருத்து.... விடுதலைப் புலிகள் மீள் உருவாக்கமா?!!