சட்டவிரோதமாக மது விற்பவரிடம் லஞ்சம் வாங்கிய போலீஸ்! வீடியோ வெளியாகி பரபரப்பு

சட்டவிரோதமாக மது விற்பவரிடம் லஞ்சம் வாங்கிய எழும்பூர் நுண்ணறிவு பிரிவு காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில் லஞ்சம் வாங்குவது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  

சட்டவிரோதமாக மது விற்பவரிடம் லஞ்சம் வாங்கிய போலீஸ்!  வீடியோ வெளியாகி பரபரப்பு

சட்டவிரோதமாக மது விற்பவரிடம் லஞ்சம் வாங்கிய எழும்பூர் நுண்ணறிவு பிரிவு காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில் லஞ்சம் வாங்குவது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  

சட்டடவிரோத செயல்கள் நடந்தால் அதனை ரகசியமாக கண்டறிந்து காவல் துறை அதிகாரிகளுக்கு தெரிவித்து நடவடிக்கை எடுக்க வைப்பது, குற்றங்களை தடுப்பது, ரவுடிகளின் செயல்பாடுகளை தடுப்பது என சட்டவிரோத செயல்களை தடுக்கும் முக்கிய பணி சென்னை காவல்துறையில் செயல்பட்டு வரும் நுண்ணறிவு பிரிவினருடையது. ஆனால் சட்டவிரோதமாக மது பாட்டில் விற்கப்படுவதை கண்டறிந்து தடுக்கும் பணியில் இருக்கும் நுண்ணறிவு பிரிவு காவலர் சட்டவிரோதமாக மது பாட்டில் விற்கும் நபரிடம் லஞ்சம் வாங்கி கொண்டு அனுமதிக்கும் அதிர்ச்சி வீடியோ வெளியாகி உள்ளது.  

எழும்பூர் காவல் நிலைய நுண்ணறிவு பிரிவு காவலர் குமுதநாதன் எழும்பூர் ரயில் நிலையம் அருகில் வைத்து சட்டவிரோதமாக மதுபாட்டில் விற்பவரிடம் லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது தொடர்பாக துறைரீதியிலான விசாரணை நடத்தப்பட்டது. நுண்ணறிவு காவலர் குமுதநாதனிடம், பெட்ரோலுக்கு பணம் வாங்கியதாக காவல்துறை அதிகாரிகளிடம் மழுப்பலான பதிலை கூறியதாக தெரிகிறது. இதையடுத்து லஞ்சம் வாங்கியதாக நுண்ணறிவு பிரிவு காவலர் குமுதநாதனை சஸ்பெண்டு செய்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.  

மேலும் சட்டவிரோதமாக மதுபாட்டில் விற்கும் அந்த நபரை கைது செய்யும்படி உத்தரவிட்டுள்ளார். அந்த நபரின் பெயர் சண்முகம் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தலைமறைவான அவரை எழும்பூர் போலீசார் தேடி வருகின்றனர். இதற்கு வேறு யாரெல்லாம் உடந்தையாக உள்ளார்கள்? என்பது தொடர்பாக துறைரீதியிலான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.