தொழிற்போட்டியில் தாக்குதல்; ஆளும் கட்சி எம்.எல்.ஏ ஆதரவால் நடவடிக்கை எடுக்க மறுக்கும் காவல்துறை!

தொழிற்போட்டியில் தாக்குதல்; ஆளும் கட்சி எம்.எல்.ஏ ஆதரவால் நடவடிக்கை எடுக்க மறுக்கும் காவல்துறை!

மாங்காடு அருகே எதிர் எதிர் ஓட்டல்களுக்குள் தொழில் போட்டியில் உரிமையாளரை கல்லால் தாக்கிய சிசிடிவி காட்சி வெளியாகியும், ஆளுங்கட்சி எம்எல்ஏவின் துணை இருப்பதால் புகார் அளித்தும் போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்டவர் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாங்காடு அடுத்த மதனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் காந்தி ராஜ்(46), கடந்த சில ஆண்டுகளாக இதே பகுதியில் உணவகம் நடத்தி வருகிறார். இவரது உணவகத்திற்கு எதிரே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நவபிரகாஷ் என்பவர் ஹோட்டல் தொடங்கியுள்ளார். எதிரெதிரே இரண்டு ஓட்டல்களும் செயல்பட்டதால் நவபிரகாசம் ஓட்டலில் வியாபாரம் சற்று குறைந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் காந்திராஜ் உணவகம் ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்துடன் இணைத்துள்ளதால் ஆன்லைனில் உணவு டெலிவரி செய்யும் பனியும் நடந்து வருகிறது. கடந்த இரண்டு தினங்களுக்கு வாடிக்கையாளர்  ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவை வாங்கி செல்ல வந்த ஊழியர் தெரியாமல் நவபிரகாஷ் கடைக்கு சென்ற நிலையில் வாடிக்கையாளர் ஆர்டர் செய்த உணவு இல்லை எனவும் ஆர்டரை கேன்சல் செய்து விடுமாறு நவபிரகாஷ் கூறியுள்ளார். இந்த நிலையில் ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனம் காந்திராஜிக்கு தகவல் தெரிவித்த நிலையில் ஊழியர் தங்களது கடைக்கு வரவில்லை எனவும் ஆர்டர் செய்த உணவு தயாராக இருப்பதாக கூறிய நிலையில் பின்னர் ஊழியரை அழைத்து பேசியபோதுதான் ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் ஊழியர் கடை மாறி சென்றதும் கடைகளுக்குள் இருந்த போட்டியில் நவபிரகாஷ் இவ்வாறு கூறியது தெரியவந்தது. இதனால் இரண்டு கடை உரிமையாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் நவபிரகாஷ் திடீரென கீழே இருந்த கல்லை எடுத்து வந்து கடையின் அருகே நின்று கொண்டிருந்த காந்தி ராஜை கல்லால் சரமாரியாக தாக்கியதில் அவருக்கு முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று திரும்பிய நிலையில் காந்தி ராஜ் மாங்காடு போலீசில் புகார் அளித்தார். ஆனால் மாங்காடு போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் மேலும் தன்னை தாக்கிய நபர் வணிகர் சங்க தலைவர் மற்றும் அவரது மகன் எம்.எல்.ஏ ஆகியோரின் ஆதரவு தன்னிடம் இருப்பதால் எங்கு சென்றாலும் தன் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என தாக்கிய நபர் கூறியதாகவும் புகார் அளித்துள்ளார். சிசிடிவி ஆதாரங்களுடன் புகார் அளித்தும் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட நபர் தரப்பில் கூறப்படுகிறது. தற்போது தொழில் போட்டியில் ஓட்டல் உரிமையாளரை மற்றொரு உரிமையாளர் கல்லால் காக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிக்க:"ஒன்றிய அரசுக்கு ஓட்டு தான் முக்கியம்" மநீம பொதுச் செயலாளர் அருணாச்சலம் காட்டம்!